ETV Bharat / state

‘இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தது திமுக தான்’ - துரைமுருகன் பேச்சால் குழம்பிய அதிகாரிகள்!

author img

By

Published : Jul 31, 2023, 6:42 PM IST

மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கியதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட அதிகாரிகள் இத்திட்டத்தை கொண்டுவந்தது திமுகவா? அதிமுகவா என குழம்பினர்.

Etv Bharat மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கிய அமைச்சர் துரைமுருகன்
Etv Bharat மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கிய அமைச்சர் துரைமுருகன்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கிய அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் 7ஆவது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை பொதுமக்களின் பார்வைக்காக வேலூர் வந்தது. இதில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைகழக வேந்தர் விசுவநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் மேளதாளங்கள் முழங்க அழைத்து வந்தனர்.

இதில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கோப்பையைத் திறந்து வைத்து பேசினார். இதன் பின்னர் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கபடும் இலவச மிதிவண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், மேயர், மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு, கவுன்சிலர் அன்பு, மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இதே போன்று மாவட்டத்தில் பொன்னை திருவலம் ஆகிய பகுதிகளிலும் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. முன்னதாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மேட்டூர் அணைக்கு கர்நாடக அரசு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை விட்டுக்கொண்டு தான் உள்ளனர். கர்நாடக அரசு தண்ணீரை கொடுக்கிறது. பாஜக நடத்துவது என்ன யாத்திரை என்பதை எங்கள் தலைவரே சொல்லிவிட்டார்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து, என்எல்சி போராட்டம், அதிமுகவுக்கு அனுமதி மறுப்பு குறித்து கேள்வி கேட்டதற்கு பதில் கூறாமல் எழுந்து சென்றார்.

காட்பாடி அரசுப் பள்ளி விழாவில் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் பேசுகையில், “அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் நல்ல திட்டம் என்பதால் அதனை நாங்களும் தொடர்கிறோம்” என்று பேசினார்.

பின்னர் விழாவில் பேசிய நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “நந்தகுமார் சொன்னது தவறு, இது 2006ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதனை தான் தொடர்ந்து வழங்கி வருகிறோம்” என்று பேசினார். இது அதிகாரிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பட்டியலின நிதியை மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மடைமாற்றம் செய்வது கண்டிக்கத்தக்கது - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.