ETV Bharat / state

டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தொடர்வதா? - மணியரசன் கடும் எதிர்ப்பு

author img

By

Published : Feb 20, 2020, 9:26 PM IST

திருச்சி : பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதியில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தொடரும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Will the existing hydrocarbon projects in the Delta continue Manirasanan is fiercely resistant
டெல்டாவில் ஏற்கனவே உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தொடர்வதா? - மணியரசன் கடும் எதிர்ப்பு

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் டெல்டா பகுதியை வேளாண்மை மண்டலமாக அறிவிக்கும் சிறப்பு வேளாண் மண்டலம் குறித்த சட்ட முன்வடிவை வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தாக்கல் செய்தார்.

அப்போது செயல்பாட்டில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது, சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்ட இந்த நாளுக்கு முன்பாக திட்ட அளவில் ஏற்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்கள் நிறுத்தப்படாது. இனிமேல் வரக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குதான் அனுமதி மறுப்பு என்று தெரிவித்தார்.

இன்று திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது இது தொடர்பாக பேசிய மணியரசன், ’வேளாண் மண்டலம் குறித்த சட்ட முன்வடிவை முதலமைச்சர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்த இந்த தேதிக்கு முன்பாக செயல்பாட்டில் உள்ள திட்ட அளவில் ஏற்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்கள் நிறுத்தப்படாது. இனிமேல் வரக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குதான் அனுமதி மறுப்பு என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 4,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதி இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பொழுது செயல்பாட்டில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்காக பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற வேண்டும் என்பதற்காக போராடினார்களோ அந்த குழாய்கள் எடுக்கப்படாது. இப்போதுள்ள சட்டப்படி செயலில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட திட்டமாக உள்ள இவைகளுக்கு தடை கிடையாது என்று சொல்லி இருக்கிறார்.

டெல்டாவில் ஏற்கனவே உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தொடர்வதா? - மணியரசன் கடும் எதிர்ப்பு

எனவே இதில் பல குழப்பங்கள் இருக்கின்றன. குறிப்பாக திருச்சி மாவட்டம் லால்குடி, புள்ளம்பாடி, கரூர் மாவட்டம் குளித்தலை போன்ற பகுதிகள் இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்கப்படவில்லை. இவை அனைத்தும் வேளாண்மை நிறைந்த பகுதிகள் ஆகும். இது குறித்து குறைகளை களைய முதலமைச்சர் தலைமையில் துணை முதலமைச்சர் உள்பட 24 பேர் கொண்ட குழு பரிசீலித்து அதன் முடிவுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதனால் குறைபாடுகளுடன் தற்போது அவசரமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்றாமல் அடுத்து ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கழித்து வேறு சட்டமன்ற கூட்டத்தில் இதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் குறித்த எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி மசோதா இயற்றியும் நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அதனால் இந்த சட்ட முன்வடிவு கணக்கு காட்டுவது போல அமைந்துவிடக்கூடாது. முதலமைச்சர் எச்சரிக்கையாக இருந்து அவசரப்படாமல் கருத்துக்களைக் கேட்டு எந்த அளவுக்கு நல்ல வலுவாக செய்ய முடியுமோ அந்த அளவுக்கு நிதானமாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ என்றார்.

“வேளாண் நிலம்” மாநில அதிகார பட்டியலில் வருவதால், இது தொடர்பில் சட்டமியற்ற மத்திய அரசை எதிர்பார்க்க வேண்டியதில்லை மாநில அரசே சட்டம் இயற்றலாம் என அரசியலமைப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : ஜெயலலிதா பிறந்தநாளன்று மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி - மதுரை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.