ETV Bharat / state

தோல்விக்கானக் காரணங்களைத் தேடுகின்ற அதிமுகவினர் - அமைச்சரின் குற்றச்சாட்டு

author img

By

Published : Oct 16, 2021, 10:04 PM IST

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்விக்கான காரணங்களை அதிமுக தேடி வருவதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு குற்றம்சாட்டியுள்ளார்.

குடிநீர்த்தேக்கத் தொட்டிக்கானபணிகளைத் தொடன்கி வைத்து பேசினார்
திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு

திருச்சி: தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள குடிநீர்த் தொட்டி வளாகத்தில் ரூ.4.50 கோடி மதிப்பில், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, புதிய மேல்நிலை குடிநீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகளை தொடக்கி வைத்தார்; அதன்பின், பிரதான உந்துகுழாய்கள் பதிக்கும் பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

நகராட்சி தேர்தல்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருச்சி பிராட்டியூர் கருமண்டபம் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்காக ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இன்று புதிய நீர் தேக்க தொட்டிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, நகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு தமிழ் நாடு முதலமைச்சர் உத்தரவு கொடுத்துள்ளார். அதற்கான பணிகள் விரைவில் துவங்கும்; அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளைத் துவங்கி விட்டோம்; அதிமுக ஆட்சியில் இருந்தபோது, எப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார்களோ அதேபோல் விதிமுறைகளை பின்பற்றி நாங்கள் நடத்தினோம். ஆனால் அவர்கள் தேர்தல் நடத்திய போது நாங்கள் எல்லாம் சிறையில் இருந்தோம்." என்று கூறினார்.

மேலும், திருப்பத்தூரில் 4 வாக்கு வித்யாசத்தில் திமுக தோல்வி அடைந்துள்ளது. மிக மிக நேர்மையான முறையில் திமுக அரசு இந்த தேர்தலை நடத்தி உள்ளது. ஏற்கனவே ஒதுக்கியபடி விதிமுறைகளை பின்பற்றி தான் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் தோல்விக்கான காரணத்தை அதிமுக தேடி கண்டுபிடித்து சொல்கிறது.

கோயில் திறப்பு

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக 28 இடங்களில் எப்படி வெற்றி பெற்றது என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்; பக்தர்களின் நலன்கருதி வாரத்தின் இறுதி நாட்களில் கோயில்களை திறக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. முடிவு ஏற்கனவே செய்ததை தெரிந்துகொண்டு பாஜக போராட்டம் நடத்தினார்கள். திறந்த பின்னர் நாங்கள் சொல்லித்தான் திறந்தோம் என்று கூறுகிறார்கள்.

அதிமுக அமைச்சர் குற்றச்சாட்டு
அதிமுக அமைச்சர் குற்றச்சாட்டு

திருச்சியில் புதிய பேருந்து நிலையம்

" திருச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிர்வாக ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளார்கள். முதற்கட்டமாக ரூ.140 கோடி பெறப்பட்டுள்ளது. இந்த பணிகளை துவக்கி வைக்க தமிழ்நாடு முதலமைச்சரை வரவேற்றுள்ளோம். அவர் விரைவில் துவக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ஊரக உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கான காரணத்தை அதிமுக தேடி வருகிறது" என அவர் கூறினார்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு - சசிகலா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.