ETV Bharat / state

ஆவினின் புதிய ரக பாக்கெட் பால் அறிமுகம்...!

author img

By

Published : Nov 16, 2019, 7:43 PM IST

திருச்சி: பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஆவினின் புதிய ரக பால் பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

new-aavin-milk-packets-introduced

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டி கிராமத்தில் ஆவின் பால் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. அங்கு இன்று புதியரக பாக்கெட் பால் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சமன்படுத்தப்பட்ட மற்றும் நிறைகொழுப்பு ஆகிய புதிய பாக்கெட் பால் ரகங்களை ஆவின் தலைவர் கார்த்தி அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஆவின் பொதுமேலாளர் சுமன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது கார்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ள நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் சமன்படுத்திய பால் 500 மிலி பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கொழுப்புச்சத்து 3.0 சதவிகிதம், இதர சத்து 8.5 சதவிகிதம் என்ற தரத்தில் கார்டு பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.40க்கும், ரொக்க விற்பனை பால் லிட்டருக்கு ரூ.43க்கும் விற்பனை செய்யப்படும்.

இதேபோல் ஏழை எளிய மக்களின் நலன் கருதி நிறைகொழுப்பு பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கொழுப்புச் சத்து 6.0 சதவிகிதம், இதர சத்து 9.0 சதவிகிதம் என்ற தரத்தில் 180 மிலி பால் பாக்கெட் ரூ.10க்கு விற்பனை செய்யப்படும்.

ஆவினின் புதிய ரக பால் பாக்கெட்கள் அறிமுகம்

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி ஆவினில் நாள்தோறும் 4.63 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் தினமும் 1.5 லட்சம் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி ஆவின் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. பால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே 5 ஆயிரம் லிட்டர் வரை சேமித்து வைக்கக்கூடிய கூலர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் கொள்முதல் செய்தவுடனேயே அது பாதுகாத்து வைக்கப்படுகிறது என்றார். சமீபத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்: ராஜேந்திர பாலாஜியின் அடுத்த அதிரடி!

Intro:திருச்சி ஆவினில் புதிதாக 2 ரக பால்கள் அறிமுகம் செய்யப்பட்டது.Body:திருச்சி:
திருச்சி ஆவினில் புதிதாக 2 ரக பால்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டில் ஆவின் பால் உற்பத்தி நிறுவனம் செயல்படுகிறது. இன்று புதிய ரக பால்கள் அறிமுக விழா இன்று நடந்தது. சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் நிறை கொழுப்பு பால் ஆகிய பால் ரகங்களை ஆவின் தலைவர் கார்த்தி அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் சுமன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது தலைவர் கார்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ள நுகர்வோர்கள் பயன் பெறும் வகையில் சமன்படுத்திய பால் 500 மிலி பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கொழுப்புச்சத்து 3.0 சதவிகிதம், மற்றும் இதர சத்து 8.5 சதவிகிதம் என்ற தரத்தில் கார்டு பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.40- மற்றும் ரொக்க விற்பனைக்கு பால் லிட்டருக்கு ரூ.43- என்ற விலையில் விற்பனை செய்யப்படும். மேலும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி நிறை கொழுப்புப் பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கொழுப்புச் சத்து 6.0 சதவிகிதம்,மற்றும் இதர சத்து 9.0 சதவிகிதம் என்ற தரத்தில் 180 மிலி பால் பாக்கெட் ரூ.10க்கு விற்பனை செய்யப்படும்.
திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி ஆவினில் நாள்தோறும் 4.63 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் தினமும் 1.5 லட்சம் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் இங்கிருந்து சென்னைக்கு ஒன்றரை லட்சம் லிட்டர் பால் அனுப்பிவைக்கப்படுகிறது. மொத்தம் 601 கூட்டுறவு சங்கங்களில் 2 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். சுமார் 70 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். திருச்சி ஆவின் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தாலுகா வாரியாக ஆவின் உயர்ரக விற்பனையங்கள் திறக்கப்படவுள்ளது. உறுப்பினர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது. தீவனத்திற்கு ஒரு கிலோவுக்கு 4 ரூபாய் மானியம் அளிக்கப்படுகிறது. பால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே 5 ஆயிரம் லிட்டர் வரை சேமித்து வைக்க கூடிய கூலர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் கொள்முதல் செய்தவுடனேயே அது பாதுகாப்பாக வைக்கப்படுகிறது என்றார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.