ETV Bharat / state

Trichy Metro: திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம்!

author img

By

Published : Mar 30, 2023, 12:42 PM IST

திருச்சியில் சுமார் 68 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் வகையில் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க சாத்தியக்கூறு அறிக்கை தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trichy Metro Rail Project
திருச்சி மெட்ரோ ரயில்

திருச்சி: பொதுப்போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தப் பெங்களூருவைச் சேர்ந்த ஆலோசகர் மூலம் திருச்சி மாநகராட்சி நிறைவு செய்த விரிவான இயக்கம் திட்டம் (சிஎம்பி) திருச்சி மாநகரில் முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் நெட்வொர்க்கிற்கான அதிக தேவையுள்ள தாழ்வாரங்களாக, 3 சாத்தியமான வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளது.

அதில் மொத்தம் 68 கிமீ நீளத்திற்கு அடையாளம் காணப்பட்ட பொதுப் போக்குவரத்து வழித்தடங்கள், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) முன்மொழியப்பட்ட திருச்சி மெட்ரோவிற்கான முதன்மைத் திட்டமாகச் செயல்படும் என அதிகாரிகள் கூறினர். விரைவில் திருச்சியிலும் மெட்ரோ ரயில் சேவை திட்டம் தொடங்கப்பட உள்ளது. திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை எந்தெந்த வழித்தடங்களில் அமைக்க முடியும் என்பது குறித்து பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த ஓராண்டாக திருச்சியில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி வந்தது.

இந்த தொலைநோக்கு ஆய்வு அறிக்கை தற்போது நடைபெற்ற மாநகராட்சி அவசர கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அழகப்பன் விளக்கி கூறினார். அதில், "அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஒரு நகரத்துக்கு பொதுப் போக்குவரத்து எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து திருச்சி மாநகரில் ஓராண்டு காலம் 803.75 சதுர கிலோ மீட்டரில் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்கு ஆய்வு நடத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் சமயபுரம் முதல் ஸ்ரீரங்கம், சத்திரம் பஸ் நிலையம், முல்லைநகர், வயலூர் வரை 18.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடமும், துவாக்குடி முதல் திருவெறும்பூர், பால்பண்ணை, பஞ்சப்பூர் வழியாக மத்திய பஸ் நிலையம் வரை 26 கிலோ மீட்டருக்கு ஒரு வழித்தடமும், ஜங்ஷன் முதல் விமானநிலையம், புதுக்கோட்டை ரோடு, சுற்றுச்சாலை வரை 23.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடமும் என 3 வழித்தடங்களில் மொத்தம் 68 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை நிறைவேற்றச் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஆய்வு அறிக்கையைத் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி, அதன் மூலமாக மத்திய அரசிடம் இருந்து இந்த திட்டத்துக்கான நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, அதன் பிறகு தான் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கூறினார்.

மேலும், 66 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபாதை, பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல ஜங்ஷன் உள்பட 9 இடங்களில் வழித்தடம், காந்தி மார்க்கெட் பகுதியில் சரக்கு ஒருங்கிணைப்பு மையம், இன்னும் 4 இடங்களில் பன்னோக்கு வாகன நிறுத்தும் இடம், ஸ்மார்ட் சிக்னல்கள் என பல்வேறு அம்சங்கள் அமைய உள்ளன" எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தற்கொலைக்கு முயன்ற வடமாநில இளைஞரை தொழில் முனைவோராக மாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.