ETV Bharat / state

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஏடிஎம் வங்கியில் கொள்ளை முயற்சி!

author img

By

Published : Nov 9, 2019, 3:42 PM IST

திருச்சி: துப்பாக்கி தொழிற்சாலை அருகே இயங்கிவரும் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் அடையாளம் தெரியாத நபரால் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம்

திருச்சி அருகே மத்திய பாதுகாப்புத் துறையின் துப்பாக்கி தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இந்தத் துப்பாக்கித் தொழிற்சாலைக்கு அருகே பிரபல வங்கிகளுக்குச் சொந்தமான ஐந்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் இயங்கிவருகின்றன.

இதில் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் ஒன்று இயங்கிவருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த ஏடிஎம் அறைக்குள் நுழைந்து இயந்திரத்தை உடைத்துள்ளார்.

கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம்
கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம்

சத்தம் அதிகமாகக் கேட்டதால் அருகில் தூங்கிய ஒரு நபர் விழித்து 'என்ன சத்தம்' என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் அவசர அவசரமாக அங்கிருந்து ஓடியுள்ளார். அவர் கறுப்பு நிற கோட் அணிந்து வந்துள்ளார்.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நவல்பட்டு காவல் துறையினர், அங்கு ஆய்வு செய்தனர். அப்போது ஏடிஎம் இயந்திரத்தை சுற்றி மிளகாய்ப்பொடி தூவப்பட்டிருந்தது. அதேபோல், ஏடிஎம் உள்ளே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை கறுப்பு மை கொண்டு மறைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இயந்திரத்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : கொலை - கொள்ளை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

Intro:திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் எஸ்பிஐ ஏடிஎம் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதுBody:திருச்சி:
திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் எஸ்பிஐ ஏடிஎம் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
திருச்சி அருகே மத்திய பாதுகாப்பு துறையின் துப்பாக்கி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி தொழிற்சாலைக்கு அருகே பிரம்மாண்டமான ரவுண்டானா ஒன்று சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிதான் துப்பாக்கி தொழிற்சாலையின் பிரதான பேருந்து நிலையமாகும். ரவுண்டானா அருகே பிரபல வங்கிகளுக்குச் சொந்தமான ஐந்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்.கள் உள்ளன.
இதில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்.மும் ஒன்று. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் எஸ்பிஐ ஏடிஎம் அறைக்குள் நுழைந்து, எந்திரத்தை உடைத்துள்ளார். சத்தம் அதிகமாக கேட்டதால் அருகில் தூங்கிய ஒரு நபர் விழித்து என்ன சத்தம் என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் அவசர அவசரமாக அங்கிருந்து ஓடி விட்டார். அவர் கருப்பு கோட் அணிந்து வந்துள்ளார். தகவலறிந்த நவல்பட்டு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று ஏடிஎம் உள்ளே ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏடிஎம் எந்திரத்தை சுற்றி மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. அதேபோல் ஏடிஎம் உள்ளே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை கருப்பு மை கொண்டு மறைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு எந்திரத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரிக்கப்பட்டன.
தகவலறிந்த திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக் சம்பவ இடத்தை பார்வையிட்டு கொள்ளையில் ஈடுபட முயன்ற நபரை பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையைத் தொடர்ந்து பாரத மிகுமின் நிறுவனத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் 1.47 கோடி ரூபாய் கொள்ளை போனது.
அதில் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யாத நிலையில் தற்போது துப்பாக்கி தொழிற்சாலை அருகே ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளை முயற்சி நடந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.