ETV Bharat / state

5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர்; கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

author img

By

Published : Dec 13, 2022, 3:40 PM IST

வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர்; கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை
5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர்; கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை

5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர்; கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை

திருச்சி: லால்குடி அருகே மேலவாளாடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜா என்பவரின் குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் பிரச்னை இருந்துள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் யுவராஜ் அளித்தப் புகாரின் பேரில் ஜெகதீசன் மீது கடந்த 2.11.2022 அன்று POCSO சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மாலதி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில் இவ்வழக்கிற்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல் ஆய்வாளர் மாலதி, யுவராஜிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். மேலும் லஞ்சப் பணத்தை 13.12.2022 காலை காவல் நிலையம் வந்து தன்னிடம் கொடுக்க வேண்டுமாறும் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இதுகுறித்து அளித்தப்புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனையின் பேரில், யுவராஜிடமிருந்து இன்ஸ்பெக்டர் மாலதி 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். இன்ஸ்பெக்டர் மாலதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பத்தூர் அருகே விவசாயி கொடூர கொலை: திமுக நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.