ETV Bharat / state

சொந்தக் கட்சி கவுன்சிலரையே கடத்த முயன்ற அதிமுகவினர்!

author img

By

Published : Jan 6, 2020, 8:23 PM IST

திருப்பூர்: கவுன்சிலர் பதவியேற்பு முடிந்தவுடன் அதிமுக கவுன்சிலரை அவரது கட்சியினரே கடத்த முயன்ற சம்பவம் காங்கேயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kangayam admk Councilor issue  காங்கேயம் கவுன்சிலரை கடத்த முயன்ற அதிமுகவினர்  The admk member tried to kidnape their own party councilor in kangayam  காங்கேயம் கவுன்சிலர் பிரச்னை  காங்கேயம் அதிமுக கவுன்சிலர் கடத்தல்  திருப்பூர் மாவட்டச் செய்திகள்
சொந்தக் கட்சி கவுன்சிலரை கடத்த முயன்ற அதிமுகவினர்: காங்கேயத்தில் பரபரப்பு

உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய மற்றும் ஊராட்சி கவுன்சிலர் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. காங்கேயம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் கவுன்சிலர் பதவியேற்பு விழா நடைபெற்றது. மொத்தமுள்ள 11 வார்டுகளில் 5 வார்டுகளில் அதிமுகவும், 4 வார்டுகளில் திமுகவும், 2 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், 2ஆவது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அய்யனார் பதவியேற்று முடிந்ததும், அதிமுகவினரே அவரை இழுத்துச்செல்ல முயன்றனர். அப்போது, சுயேச்சை வேட்பாளர் மகேஷ்கமாரும் அவரது ஆதரவாளர்களும் அய்யானரை தங்கள் பக்கம் இழுக்க ஒன்றிய அலுவலகமே போர்க்களமாக மாறியது.

இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் அய்யனாரை காப்பாற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் அறையில் பாதுகாப்பாக அமர வைத்தனர். இதனைத்தொடர்ந்து அதிமுக, திமுக தொண்டர்களிடையே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. பின்னர் கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.

சொந்தக் கட்சி கவுன்சிலரை கடத்த முயன்ற அதிமுகவினர்!

அதன்பின்னர் கவுன்சிலர் அய்யனார், சுயேச்சை வேட்பாளரான மகேஷ்குமார் ஒன்றியத் தலைவராகதான் ஆதரவு தருவதாகவும் அதனால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் காவலர்களிடம் மனு அளித்தார். இதன்பின்பு துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் 10 காவலர்கள் பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அய்யனார் அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும், ஒன்றியத் தலைவர் தேர்வு நடைபெறும் வரை அய்யனார் வீட்டுக்கு காவலர்கள் பாதுகாப்பு வழங்கவுள்ளனர். அதிமுக கவுன்சிலரை கடத்த அதிமுகவினரே முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சுயேச்சை வேட்பாளரை கடத்திய திமுகவினர் - காவல் துறையினர் விசாரணை

Intro:அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கடத்தல் களேபரம்-10போலீசார் சூழ காவல்துறை வாகனத்தில் 5 மணி நேரம் கழித்து வீட்டுக்கு சென்றார்Body:காங்கயம் ஒன்றியத்தில் 2வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அயினாரை அதிமுக வினரே கடந்த முயன்ற சம்பவத்தால் காங்கயம் ஒன்றிய அலுவலகம் போர்களமாக மாறியது.

உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து தமிழகம் முழுவதும் இன்று ஒன்றிய மற்றும் ஊராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. காங்கயம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் கவுன்சிலர்கள் பதியேற்பு விழா நடைபெற்றது.காங்கயம் ஒன்றியத்தில் 11 வார்டுகளில் 5 அதிமுக வும்,4 ல் திமுக வும்,2 ல் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்
இந்நிலையில் 2 வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அய்யனார் பதவியேற்று முடிந்ததும்,
அவரை அதிமுக வினர் இழுத்துக்கொண்டு செல்ல முற்பட்டனர்.
அப்போது சுயேச்சை வேட்பாளர் மகேஷ்குமாரும் அவரது ஆதரவாளர்களும் அய்யனாரை தங்கள் பக்கம் இழுக்க ஒரே போர்களமாக மாறியது.

இதனை அடுத்து அங்கிருந்த காவல்துறையினர் அய்யனாரை காப்பாற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் அறையில் பாதுகாப்பாக அமர வைத்தனர்.இதனை அடுத்து அதிமுக,திமுக தொண்டர்களிடையே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவரைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பின்னர் இருதரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர்,
அவர்களை கலைந்து போக செய்தனர்.
அதன் பின்னர் கவுன்சிலர் அய்யனார், சுயேச்சை வேட்பாளரான மகேஷ்குமார் ஒன்றிய தலைவராக தான் ஆதரவு தருவதாகவும் அதனால் தனக்கு பாதுகாப்பு கோரியும் போலீசாரிடம் மனு அளித்தார்.

இதனை தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் தலைமையில் 10 போலீசார் பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் 5 மணி நேரம் கழித்து தனது வீட்டிற்கு சென்றார்.
தொடர்ந்து ஒன்றிய தலைவர் தேர்வு நடைபெறும் வரை அய்யனார் வீட்டுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க உள்ளனர்.

அதிமுக கவுன்சிலரை கடத்த அதிமுக வினரே முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.