ETV Bharat / state

மிலாது நபி விழாவில் சமாதான புறாவை பறக்கவிட்ட குழந்தைகள்!

author img

By

Published : Nov 11, 2019, 7:53 AM IST

திருப்பூர்: மிலாது நபி விழாவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய குழந்தைகள் கலந்துகொண்ட நபிகள் புகழ்பாடும் பேரணியும் சமாதான புறாவை பறக்கவிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Milady Prophet's Children Rally in Tirupur

இஸ்லாமியர்கள் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாது நபி விழாவாகக் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் நேற்று திருப்பூரில் மிலாது குழுவின் சார்பில் நபிகள் புகழ்பாடும் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியை திருப்பூர் வட்டார ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் ஜபாருல்லா பிரார்த்தனை செய்தும், பெரிய பள்ளிவாசலின் தலைவர் இப்ராஹிம் சாஹிப் கொடி அசைத்தும் சமாதான புறாவை பறக்கவிட்டு தொடங்கிவைத்தனர். பேரணியில் திருப்பூர் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் ஊர்வலமாகச் சென்றனர்.

மிலாது குழுவின் சார்பில் நபி புகழ்பாடும் பேரணி

பேரணியில் கலந்துகொண்ட சிறுவர் சிறுமியர், 'அனைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேண வேண்டும், அமைதியை காக்க வேண்டும்' உள்ளிட்ட கோஷங்களை எழுப்பிக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மிலாது குழுவின் தலைவர் சையது மன்சூர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க: 'இஸ்லாமியர்களுக்கு அதிமுக துணை நிற்கும்' - அமைச்சர் பாண்டியராஜன் உறுதி!

Intro:திருப்பூரில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமிய குழந்தைகள் கலந்து கொண்ட நபி புகழ்பாடும் பேரணி-குழந்தைகள் சமாதான புறாவை பறக்கவிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Body:இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாடி நபி விழாவாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் திருப்பூரில் மீலாது கமிட்டியின் சார்பில் நபி புகழ் பாடும் பேரணி நடைபெற்றது.இந்த பேரணியை திருப்பூர் வட்டார ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் ஜபாருல்லா பிரார்த்தனை செய்தும்,பெரிய பள்ளிவாசலின் தலைவர் இப்ராஹிம் சாஹிப் கொடி அசைத்ததும் துவக்கி வைத்தனர்.பேரணியில் திருப்பூர் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சிறுவர்,சிறுமியர்கள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் ஊர்வலமாக சென்றனர்.பேரணியில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமியர்கள் அணைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேணவேண்டும் ,அமைதியை காக்கவேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.இந்த நிகழ்ச்சியில் மீலாது கமிட்டியின் தலைவர் சையது மன்சூர்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.