ETV Bharat / state

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கப்பல் போல் மிதந்த கார்!

author img

By

Published : Dec 16, 2020, 4:41 PM IST

Updated : Dec 16, 2020, 10:55 PM IST

உடுமலைப்பேட்டை அருகே மஞ்சள்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கி கப்பல் போல் மிதந்த காரை அப்பகுதி மக்கள் கயிறு கட்டி மீட்டனர்.

Car floating in rain water on railway tunnel bridge
சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மிதந்த கப்பல் போல் மிதந்த கார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மருள்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கீழ்மட்ட சுரங்கப்பாதையில் ஒரு மாதமாக தேங்கியுள்ள மழைநீரால் அப்பகுதி மக்கள் அவ்வழியைப் பயன்படுத்தமுடியாமல் அவதியடைந்துள்ளனர். இந்த சுரங்கப்பாதையில், அவ்வப்போது, மழை நீர் தேங்குவதும், அதை வெளியேற்றும் வரை மக்கள் அவ்வழியைப் பயன்படுத்தமுடியாமல் அவதியடைவதும் தொடர்கதையாகி வருகிறது.

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கப்பல் போல் மிதந்த கார்

இந்நிலையில், இன்று (டிசம்பர் 16) அவ்வழியே செல்ல முயன்ற கார் ஒன்று தேங்கிய தண்ணீரில் மிதக்கத் தொடங்கியது. உடனே காரில் இருந்தவர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. தண்ணீரில் மிதந்த காரை அப்பகுதி மக்கள் கயிறு கட்டி வெளியேற்றினர். இந்த சுரங்கப்பாதையில், தேங்கும் மழை நீரை உடனடியாக அகற்றி, வருங்காலங்களில் நீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு காணவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மேம்பாலத்தில் சிக்கிய ட்ரான்ஸ்பார்மர்: வெல்டிங் வைத்ததால் பற்றி எரிந்த தீ!

Last Updated :Dec 16, 2020, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.