ETV Bharat / state

ஆசிரியருக்கு டார்ச்சர்!- மூன்று மாணவர்கள் இடைநீக்கம்

author img

By

Published : Apr 21, 2022, 2:23 PM IST

திருப்பத்தூரில் ஆசிரியரை தாக்க முயன்ற மாணவனின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியதையடுத்து, 3 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆசிரியருக்கு டார்ச்சர்!- மூன்று மாணவர்கள் இடைநீக்கம்
ஆசிரியருக்கு டார்ச்சர்!- மூன்று மாணவர்கள் இடைநீக்கம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியர் சஞ்ஜெய் என்பவரை அந்த பள்ளியில் படிக்கும் 12 வகுப்பு மாணவன் தாக்க முயல்வதும், பின் கொச்சை வார்த்தைகளால் மிரட்டுவதுமான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவை அந்த வகுப்பிலிருந்த மற்ற இரண்டு மாணவர்கள் பதிவு செய்ததும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் பழனி, பள்ளி தலைமையாசிரியர் வேலன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. ஆசிரியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்ட மூன்று மாணவர்களைப் பள்ளியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆலோசனை பெற்று மூன்று மாணவர்களைத் தற்காலிகமாகப் பள்ளிக்கு வர அனுமதியில்லை என தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஆசிரியரை அடிக்க சென்ற மாணவன்!- வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.