ETV Bharat / state

ரூ.2 லட்சம் செலவில் அரசு பள்ளியை சீரமைத்த ஐ.டி ஊழியர்கள்!

author img

By

Published : Feb 18, 2023, 9:16 AM IST

திருப்பத்தூர் அருகே குரும்பேரி ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியை தத்தெடுத்த 60 பேர் கொண்ட ஐடி நிறுவன ஊழியர்கள் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகளை செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

திருப்பத்தூர் அருகே ரூ.2 லட்சம் செலவில் அரசு ஆதிதிராவிடர் பள்ளியை சீரமைத்த மென்பொறியாளர்கள்!

திருப்பத்தூர்: குரும்பேரி ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியைத் தத்தெடுத்த பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் மென்பொருள் அலுவலகத்தில் பணிபுரியும் 60 தன்னார்வலர்கள் குழு, சுமார் ரூ.2 லட்சம் பொருட்செலவில் தாங்களே பள்ளியைச் சுத்தம் செய்து சுற்றுச்சுவருக்கு வண்ணம் பூசுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு அசத்தியுள்ளனர்.

குறும்பேரியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் சுமார் 200 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் குடிநீருக்கு ஏற்பாடு செய்தல், கழிவறை மற்றும் சுவர்களுக்கு வண்ணம் பூசுதல் போன்ற சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இந்நிலையில் குரும்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ராமன் முயற்சியில் பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் மென்பொருள் அலுவலகத்தில் பணிபுரியும் தனது நண்பர்களிடம் தங்களது ஊராட்சியில் சமூக சேவை ஆற்ற முன்வருமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று சுமார் 60 இளைஞர்கள் கொண்ட தன்னார்வலர்கள் குழுவினர் நேற்று (பிப்.17) குறும்பேரி அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியைத் தத்தெடுத்து சுத்தம் செய்து பள்ளிக்கு வண்ணம் அடித்து பள்ளியைச் சுத்தமாகவும் அழகாகவும் மாற்றி காட்டினார்.

திருப்பத்தூர் அருகே ரூ.2 லட்சம் செலவில் அரசு ஆதிதிராவிடர் பள்ளியை சீரமைத்த மென்பொறியாளர்கள்!
திருப்பத்தூர் அருகே ரூ.2 லட்சம் செலவில் அரசு ஆதிதிராவிடர் பள்ளியை சீரமைத்த மென்பொறியாளர்கள்!

இதனைத்தொடர்ந்து, மாணவர்களுடன் பாட்டுப்பாடி நடனமாடி மகிழ்வித்தனர். குறிப்பாக, இதுபோன்று உதவி தேவைப்படும் பள்ளிகளுக்கும் தாங்கள் உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குரும்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் ராமன், 'கந்திலி ஒன்றியம், குரும்பேரி ஊராட்சிமன்றத் தலைவராக நான் உள்ளேன். நான் பெங்களூருவிலுள்ள மென்பொருள் நிறுனத்திலுள்ள எனது நண்பர்களை கேட்டுக்கொண்டதாகவும், அதனை ஏற்று இந்த ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளிக்கு 60 பேர் கொண்ட குழுவினர் பள்ளியை சுத்தம் செய்து வண்ணங்கள் பூசியதோடு, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நலத்திட்ட நிதிகளை வழங்கியதாகவும்' கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ’இது தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இதேபோல, ஒவ்வொரு வருடமும் எங்கள் ஊராட்சியிலுள்ள பள்ளிகளுக்கு சமூகசேவை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சுமார் 100 மரக்கன்றுகளை இந்த மென் பொறியாளர்கள் நட்டுள்ளதாகவும் பள்ளிக்கும் மாணவர்களுக்கும் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளதாகவும்' அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு அமைச்சர் மெய்யநாதன் ஆறுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.