ETV Bharat / state

கரோனாவிலிருந்து மீண்ட சரத்குமார்: ஆம்பூரில் சிறப்பு பூஜை!

author img

By

Published : Dec 14, 2020, 9:24 PM IST

திருப்பத்தூர்: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததையடுத்து, ஆம்பூர் அடுத்துள்ள முனீஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

Sarathkumar overcame Corona; Special Pooja in Ambur!
Sarathkumar overcame Corona; Special Pooja in Ambur!

நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மகளும், நடிகையுமான வரலட்சுமி தெரிவித்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரத்குமார் குணமடைந்துவிட்டதாக வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சரத்குமார் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததையடுத்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள விண்ணமங்கலம் ஸ்ரீ முனீஸ்வரன் கோயிலில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டது.

கரோனாவிலிருந்து மீண்ட சரத்குமார்; ஆம்பூரில் சிறப்பு பூஜை

இதில் வேலூர் மண்டல செயலாளரும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான ஞானதாஸ், முருகன், தியாகு, ரமேஷ் ,பாலுசாமி மற்றும் மாதனூர் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

இதையும் படிங்க:கரோனாவிலிருந்து மீண்ட சரத்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.