ETV Bharat / state

"பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வோம்" - புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 7:19 AM IST

Updated : Oct 9, 2023, 9:38 AM IST

2024ஆம் ஆண்டு நாடளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதி கட்சி இணைந்து செயல்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.

puthiya needhi party will work together in the NDA Alliance  AC Shanmugam
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதி கட்சி இணைந்து செயல்படும் - ஏ.சி.சண்முகம்

"பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வோம்" - புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்!

திருப்பத்தூர்: ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதிய நீதிக் கட்சியின் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இந்த இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் பலர் பங்கேற்று இலவச மருத்துவ ஆலோசனையை பெற்றுச் சென்றனர்.

இம்முகாமினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதிய நீதிகட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியதாவது, "புதிய நீதி கட்சியை பொறுத்த வரை வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நாங்கள் அந்த கூட்டணியில் இணைந்தோம், கடந்த தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தோம், வரும் நாடளுமன்ற தேர்தலிலும் புதிய நீதிகட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடரும்.

அதற்கு முக்கிய காரணம் இன்று உலக பொருளாதாரத்தில் 5ஆவது நாடாக இந்திய நாடு உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது.
ஜி20 மாநாட்டில் உலக தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கொடுத்த மரியாதையை பார்த்து இருப்பீர்கள். உலக நாடுகளுக்கு கரோனா மருந்தை அனுப்பியவர் மோடி. இந்தியா சுதந்திரம் அடைந்து இதுவரையில் யாரும் சாதிக்காததை மோடி சாதித்து கொண்டிருக்கின்றார்.

மேலும் உலக நாடுகளை ஒன்றிணைக்கும் ராஜ தந்திரத்தை மோடி கற்று வைத்துள்ளார். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியாது. சொன்னால் கூட்டணி உடைந்து விடும். தேசிய ஜனநாயக கூட்டணியுடன் புதிய நீதி கட்சி இணைந்து ஒன்றாக நடைபோடும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: Cricket World Cup 2023: உலக கோப்பையில் அதிக கேட்சுகள் பிடித்து விராட் கோலி சாதனை!

Last Updated :Oct 9, 2023, 9:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.