ETV Bharat / state

காதல் ஜோடி தப்பியோட்டம்.. காதலன் குடும்பத்தை கொளுத்திய பெண்வீட்டார்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 8:08 PM IST

Tirupattur crime news: திருப்பத்தூர் அருகே காதல் ஜோடி தப்பியோடிய நிலையில் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

காதலனின் வீட்டைக் கொளுத்திய பெண் வீட்டார்..ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே காதல் ஜோடி வீட்டை விட்டு தப்பியோடிய நிலையில் பெண் வீட்டார், காதலனின் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை வலைவீசித் தேடிவருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் போஸ்ட் மேன் வட்டம் பகுதியைச் சேர்ந்த சிவா - பாரதி தம்பதியினர். இவரகளது வயது 18 வயதுடைய மகள் அக்ஸயா என்பவரும், அதேப் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் விஜய்(25) என்பவரும் கடந்த ஒரு வருட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, இவர்களின் காதல் விவகாரம் தொடர்பாக அறிந்த பெற்றோர்கள் இரண்டு பேரையும் இது குறித்து கண்டித்ததாக தெரியவருகிறது. இந்த நிலையில், அக்ஸ்யாவும் விஜயும் இன்று (அக்.27) அதிகாலை 5:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி தப்பியோடினர். இதைத்தொடர்ந்து, தங்களது மகள் அக்ஸ்யாவை பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விஜயின் வீட்டை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். இதனால், விஜயின் வீடு மளமளவென எரிந்து தீக்கிறையாகியது.

இதையடுத்து நடந்தவை குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், அங்கு எரிந்துகொண்டிருந்த வீட்டை தண்ணீரைக் கொண்டு அணைத்தனர். அதோடு, பெட்ரோல் ஊற்றி தீயைப் பற்ற வைத்த அக்ஸயாவின் தந்தை சிவா மற்றும் அண்ணன் அழகேசன் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.

இவ்வாறு காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தால் பெண் வீட்டார், காதலனின் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தேனியில் முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.