ETV Bharat / state

இந்தியத் திருநாடு மென்மேலும் வளர ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும்... வணிகர்கள் கோரிக்கை

author img

By

Published : Aug 26, 2022, 10:58 PM IST

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் காரணமில்லை என ஒரு நபர் ஆணையம் கூறியுள்ளதால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதை சார்ந்து தொழில் செய்த வணிகர்கள், ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரிக்கை வைத்த வணிகர்கள்
Etv Bharat ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரிக்கை வைத்த வணிகர்கள்

தூத்துக்குடியில் இன்று சப்ளையர் அசோசியேசனைச் சார்ந்த ஜவகர், ரமேஷ், ஒப்பந்ததாரர்கள் சங்க துணைத் தலைவர் பரமசிவன், துணைச் செயலாளர் சோமசுந்தரம், ஒப்பந்ததாரர்கள் சங்க பாலசுப்பிரமணியன்,சுரேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.

சப்ளையர் அசோசியேசனைச் சார்ந்த ஜவகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் துப்பாக்கி சூட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்கள். ஸ்டெர்லைட் ஆலை இயங்கும்போது வாழ்வாதாரத்தை நல்லபடியாக உயர்த்தியது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பதால் எங்களைப்போன்றவர்கள், வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளோம்.

தொழில்முறை மிக மோசமான வாழ்வாதாரமாக இருந்து கொண்டிருக்கிறது. நமது முதலமைச்சர் இப்போது தமிழ்நாட்டை தொழில் வளம் மிக்க மாநிலமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். தென்மாவட்டத்தில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை வந்தால் தான் தொழில் சிறக்கும். அனைவருக்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.

ஸ்டெர்லைட் ஆலை கொடுத்த ஆதரவினால் எங்களைப் போன்ற சிறுதொழில் முனைவோர் நன்றாக தொழில் செய்தார்கள், இப்பொழுது அனைவருடைய வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

நாங்கள் அரசுக்கு கணிசமான ஒரு தொகை வரியாக கொடுத்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது அது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தாமிரம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, நமது இந்திய தாமிரத்தை இறக்குமதி செய்து வருகிறது. நமது இந்தியத் திருநாடு மென்மேலும் வளர ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

ஒப்பந்ததாரர்கள் சங்க துணைத்தலைவர் பரமசிவன் கூறுகையில், ’தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தற்போது நீதிபதி அருணா ஜெகதீசன் -அறிக்கையில் துப்பாக்கி சூட்டிற்கும் ஸ்டெர்லைட் ஆலைக்காக நடந்து முடிந்த நிகழ்ச்சிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நாட்டின் ஏற்றுமதி செய்யுமளவுக்கு காப்பர் உற்பத்தி இருந்தது. தற்போது 35% காப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருந்த ஆலையில் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. எனவே இயங்கி கொண்டிருந்த ஆலையை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்தியத் திருநாடு மென்மேலும் வளர ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும்... வணிகர்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் உற்பத்தி மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தென் மாவட்டங்களில் வேறு எந்த தொழில்களும் வராத சூழ்நிலையில் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்க ஸ்டெர்லைட் ஆலையினை உடனடியாக திறக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைய முயற்சி செய்வேன்.. இயக்குநர் பாக்யராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.