ETV Bharat / state

காதல் தம்பதி விபரீத முடிவு.. திருமணமான 2 மாதத்தில் நடந்தது என்ன?

author img

By

Published : Dec 28, 2022, 3:17 PM IST

தூத்துக்குடியில் திருமணமான இரண்டே மாதத்தில் காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

husband and wife committe suicide
காதல் தம்பதி தற்கொலை

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம், தருவைகுளம் ஏ.எம்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமுனியசாமி (26). இவர் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிஷன் வேலை செய்து வந்தார். இவரும், துவரந்தை கிராமத்தை சேர்ந்த சீதாசெல்வி (24) என்பவரும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தனர்.

திருமணமான பின்னர் தங்கமுனியசாமி - சீதாசெல்வி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 28) காலை நீண்ட நேரம் ஆகியும் இவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அங்கு தங்கமுனியசாமியும், சீதாசெல்வியும் தூக்கில் தொங்கியவாறு சடலமாக இருந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர், உடனடியாக இதுகுறித்த தகவலை காவல்நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இருவரது உடலையும் கைபற்றி, உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலையைக் கைவிடுக
தற்கொலையைக் கைவிடுக

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி சப்-கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். புதுமண தம்பதியினர் தூக்கிட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Leena Nagvanshi: துனிஷா சர்மாவை தொடர்ந்து லீனா நாக்வன்ஷி மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.