ETV Bharat / state

தூத்துக்குடி கனமழை பாதிப்பு.. களத்தில் இறங்கிய இயக்குநர் மாரி செல்வராஜ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 8:25 AM IST

Updated : Dec 21, 2023, 9:43 AM IST

Mari Selvaraj: தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் சென்று படகின் மூலமாக மீட்டுள்ளார்.

மீட்பு பணியில் களத்தில் இறங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்
தூத்துக்குடி கனமழை பாதிப்பு

தூத்துக்குடி கனமழை பாதிப்பு

தூத்துக்குடி: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்து நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது.

இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்கும் பணிகளை, மாநில அரசுடன் சேர்ந்து இந்திய கடலோர காவல் படையினரும், இந்திய ராணுவத்தினரும் பாதிக்கப்பட்ட மக்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர். மேலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் தீவிரமாக மீட்புப் பணிகள் செய்யப்பட்டது.

இதனால், தென் மாவட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. ஆனால், தற்போது வரை சில பகுதிகளில் தண்ணீர் வடியாததால் அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடியில் பெய்த மழை வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் குழந்தைகள், வயதானவர்கள், கைக்குழந்தையுடன் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினர் நேரில் சென்று படகின் மூலமாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில், “வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடியில் பெய்த கனமழையில், அப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சுற்றியுள்ள அனைத்து குளங்களும் நிரம்பி உடைபட்டது. இதில், ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீரால், மீட்பு வாகனங்களால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் உள்ள ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் உருவாகியது. இந்த கிராமங்கள் அனைத்தும் ஆற்றிற்கும், குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள். இதை கருத்தில்கொண்டு மீட்புப் பணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டும்” என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், மங்களக்குறிச்சி பகுதியில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தங்குவதற்கு இடமில்லாமல் தவித்துக் கொண்டிருந்த குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்பட அனைவரையும் படகின் மூலமாக பாதுகாப்பான முறையில் மீட்கும் பணியை இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வளைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

  • வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை…

    — Mari Selvaraj (@mari_selvaraj) December 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, இயக்குநர் மாரி செல்வராஜ், ”எனது சகோதரர்கள் என்னை அழைத்து தங்களது உறவுகளை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இயக்குநர் மாரி செல்வராஜ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அமைச்சர் ஆய்வு செய்யும் இடத்தில் மாரி செல்வராஜுக்கு என்ன வேலை? என்று கேட்டனர். இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் "என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல.. நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என்று பதிலளித்திருந்தார்.

இதையும் படிங்க: 150 ஏக்கர் நெற்பயிர்களை சுருட்டிச் சென்ற வெள்ளம்...நிர்கதியாக நிற்கும் நெல்லை விவசாயிகள்!

Last Updated :Dec 21, 2023, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.