ETV Bharat / state

நிதி அமைச்சர் அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கை - பி.ஆர். பாண்டியன்

author img

By

Published : Mar 27, 2020, 1:04 PM IST

திருவாரூர்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும் என பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

3_farmer_problem
3_farmer_problem

இந்தியா முழுவதும் கரோனா ஒழிப்பு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் முடங்கி உள்ளனர். கிராமப் பகுதிகளில் விவசாய உற்பத்தி முடங்கியுள்ளது. குறிப்பாக காவிரி டெல்டாவில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்ய நாற்று விடப்பட்டு உழவு பணிகள் முடிவடைந்த நிலையில், தொழிலாளர்கள் ஒன்று கூட முடியாததால் நடவுப்பணி முற்றிலும் முடங்கி விட்டது.

இந்நிலையில், இதுகுறித்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், ”கரோனாவிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டாலும், விவசாயம் நலிவடைவதிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு மாற்று நடவடிக்கை குறித்து அவசர கால நடவடிக்கைகளை மேற்க்கொண்டு தடையின்றி காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை மக்கள் வாங்கி செல்வதற்கான வகையில் நாள்தோறும் மூன்று மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும்.

இதன் மூலம் விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்துவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்திட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பாதிப்பினை கணக்கீடு செய்து பாதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கடன் வசூல் முகவர்கள் என்ற பெயரில் ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவனங்கள் விவசாயிகளை மிரட்டி அச்சுறுத்திவருகிறது.

மத்திய அரசு கரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க 1.70 கோடி ரூபாய்க்கு சலுகை திட்டங்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணையாக வழங்கி விவசாய உற்பத்தியை ஊக்குவித்து வருகிறார்கள்.

இவற்றிலிருந்து வரும் நிதியாண்டிற்கான முதல் தவணை 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும். இதனை இலவசமாக வழங்க வேண்டும் இல்லையேல் குறைந்தப்பட்சம் 6 ஆயிரம் ரூபாயும் முழுமையாக ஒரே தவணையாக முன்பணமாக வழங்கிட முன்வர வேண்டும்” என்றார்

பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு

கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக முன்னெச்சரிக்கையாக செய்தியாளர்களை அழைக்காமல். தானே கைப்பேசியில் வீடியோ காட்சி பதிவு செய்து அனைத்து செய்தியாளர்களுக்கும் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஊரடங்கை கடுமையாகப் கடைப்பிடிக்க வேண்டும் - முதலமைச்சருக்கு பிரதமர் அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.