ETV Bharat / state

'ஸ்டாலின் சொல்வதற்காக நிவாரணம் கேட்க வேண்டிய அவசியமில்லை' - கே.பி.அன்பழகன்

author img

By

Published : Dec 8, 2020, 9:31 AM IST

திருவாரூர்: தமிழ்நாடு விவசாயிகளுக்காக எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கேட்டு பெறுவதற்கான முயற்சிகளை முதலமைச்சர் செய்து வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

minister kamaraju
minister kamaraju

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி. அன்பழகன், தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன், 'திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், தற்போது வரை 2 லட்சத்து 18 ஆயிரத்து 775 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால், 1 லட்சத்து 10 ஆயிரத்து 344 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

'ஸ்டாலின் சொல்வதற்காக நிவாரணம் கேட்க வேண்டிய அவசியமில்லை'

தமிழ்நாடு முழுவதும் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

ஸ்டாலின் சொல்வதற்காக முதலமைச்சர் நிவாரணத்தொகை கேட்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு விவசாயிகளுக்காக எதைக்கேட்க வேண்டுமோ, அதை முழுவதுமாகக்கேட்டுப் பெறுவதற்கான முயற்சிகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: சேலம் எட்டு வழிச்சாலை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.