ETV Bharat / state

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள் வேதனை

author img

By

Published : Jan 31, 2021, 11:29 AM IST

திருவாரூர் : நன்னிலம் பகுதி முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள்  நெல் மூட்டைகளை 10 நாட்களாக அடுக்கி வைத்து காத்திருக்கின்றனர்.

paddy purchasing center
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் சம்பா தாளடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அறுவடை செய்த நெல்மூட்டைகளை கொள்முதல் செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள் மூட்டைகளை அடிக்கி வைத்து காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

இதுகுறித்து பேசிய விவசாயிகள்..

நன்னிலம் வட்டார பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்த நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொள்முதல் நிலையம் திறப்பார்கள் என்ற நம்பிக்கையில் அடுக்கிவைத்து காத்திருக்கிறோம்.

இதுவரை கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் மூட்டைகள் அனைத்தும் வெயிலில் காய்ந்து எடை குறைந்து வருகிறது. மேலும் நெல் மூட்டைகளை மூடிவைத்து பாதுகாக்க சாக்கு படுதாவிற்கு வாடகையே நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் கொடுத்து வருகின்றோம் என வேதனையுடம் தெரிவிக்கின்றனர்.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நன்னிலம் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: “உழைப்பும் நேர்மையும் தான் ட்ரெண்ட் ஆகியிருக்கு” - ஆரி அர்ஜுனன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.