ETV Bharat / state

இட்லி, வடை, பஜ்ஜி விலை! - ஒன்றிய அரசுக்கு விக்கிரமராஜா கண்டனம்

author img

By

Published : Oct 7, 2021, 2:35 PM IST

Updated : Oct 7, 2021, 5:16 PM IST

கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் இட்லி, வடை, பஜ்ஜி போன்றவைகளின் விலை உயரும் இடர் ஏற்பட்டுள்ளதால், சிலிண்டர் விலையைக் குறைக்க ஒன்றிய அரசை எச்சரிக்கின்றேன் என நன்னிலத்தில் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

விக்கிரமராஜா  eating item  eating item price raising  cylinder price  vikramaraja  சிலிண்டர் விலை  ஒன்றிய அரசு  சிலிண்டர் விலை உயர்வால் விலை ஏற்றம்
விக்கிரமராஜா

திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வர்த்தக சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் வர்த்தக சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளரைச் சந்தித்த அவர், “தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், பத்திரிகை, ஊடக விளம்பரங்கள் மூலமாக கோடிக்கணக்கில் செலவு செய்து வியாபாரங்கள் மேலே வரும் இச்சூழலில், இந்த ஆன்லைன் வர்த்தகம் சாதாரண மனிதர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றது. இதனை ஒன்றிய மாநில அரசுகளுக்கு ஊக்கப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

ஒன்றிய அரசைக் கண்டித்த விக்கிரமராஜா

தமிழ்நாட்டுக்குள் ஜிஎஸ்டி வரி கட்டாமல் வியாபாரிகளையும் காலி செய்துவிட்டு பொதுமக்களுக்குத் தரக்கூடிய பொருள்கள் சேதம் ஏற்பட்டால் அதனை மாற்றித் தராமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது ஆன்லைன் வர்த்தகம். தமிழ்நாட்டில் இருக்கின்ற 37 லட்சம் வியாபாரிகள் தொடர்ச்சியாகக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் தடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை

ஜிஎஸ்டி விலையேற்றத்தால் கட்டடப் பணிகள் அனைத்தும் நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கின்றன. கம்பிகளுக்கு மீண்டும் ஜனவரி மாதத்திலிருந்து ஜிஎஸ்டி உயர்வதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டிலிருந்து ஒன்றிய அரசு பின்வாங்கி கட்டடப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிமெண்ட் விலை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக விலை ஏற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இதனை ஒன்றிய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி விலையைக் குறைக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது.

கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய்க் கொண்டிருப்பதால் டீ, வடை, பஜ்ஜி, இட்லி உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை உயரும் இடர் ஏற்பட்டுள்ளது. இதனை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கின்றேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: யுஜிசி நிதியில் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் முறைகேடு: நீதிமன்றம் உத்தரவு

Last Updated :Oct 7, 2021, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.