ETV Bharat / state

தபால் நிலையத்தில் சிறு சேமிப்பு பணம் கையாடலா?.. பொது மக்கள் முற்றுகை.. ஊழியர்களுடன் வாக்குவாதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 10:30 AM IST

Money Handling at Post Office in Tiruvannamalai: திருவண்ணாமலை அருகே துணை அஞ்சல் தபால் நிலையத்தில் பொதுமக்கள் சேமித்து வைத்த பணத்தை ஊழியர்கள் கையாடல் செய்ததாக கூறி பொது மக்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Money Handling at Post Office in Tiruvannamalai
தபால் நிலையத்தில் சிறு சேமிப்பு பணம் கையாடல் முற்றுகையிட்ட பொதுமக்கள்

தபால் நிலையத்தில் சிறு சேமிப்பு பணம் கையாடல் முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருவண்ணாமலை: ஆரணி அருகே ஒண்ணுபுரம் கிராமத்தில் தலைமை துணை அஞ்சல் தபால் நிலையம் இயங்கி வருகிறது. இந்த துணை அஞ்சல் தபால் நிலையத்தின் கிளை அம்மாபாளையம் கிராமத்தில் உள்ளது. மேலும் இந்த தபால் நிலையத்தில் அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் "சிறு சேமிப்பு" திட்டத்தின் கீழ் தங்களின் பணத்தை சேமித்து வருவதாக கூறுகின்றனர்.

மேலும், இவர்கள் ரூ.15 லட்சத்திற்கும் மேலாக சேமித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தை ஓரு சில பொதுமக்கள் தனது கணக்கில் இருந்து எடுக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு பணிபுரியும் பணியாளர் தற்போது தபால் நிலையத்தில் பணம் இல்லை என்று அலச்சியமாக பதில் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து, தபால் நிலையத்தில் தாங்கள் சிறுக சிறுக சேமித்த பணம் இல்லை என்கிற காரணத்தினால் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இந்த சம்பவம் அம்மாபாளையம் கிராமத்தில் காட்டு தீ போல் பரவியதால் திடீரென அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் தபால் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்ணமங்கலம் போலீசார் தபால் நிலையத்தை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து சம்மந்தபட்டவர்கள் தனது வங்கி பாஸ் புத்தகத்தை கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதன் பின்னர் கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் போலீசார் கூறியதைப் போன்று கண்ணமங்கலம் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட அம்மாபேட்டை கிராம பொதுமக்கள் தபால் நிலையத்தில் தாங்கள் செலுத்தி உள்ள கணக்கு புத்தகம் மற்றும் ஆவணத்தைக் காண்பித்து புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, போலீசார் சம்மந்தப்பட்ட தபால் நிலைய ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு விரைவில், தபால் நிலையத்தில் செலுத்தப்பட்ட பணத்தை பாதிக்கபட்டவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாக தகவல் கூறப்பட்டு உள்ளது.

மேலும், ஆரணி அருகே தபால் நிலையத்தில் சேமித்த பணத்தை ஊழியர்கள் கையாடல் செய்ததாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சாதி தான் இருக்கு.. பேருந்து இல்லை.. நாங்குநேரி மக்களின் 15 ஆண்டு தீராத்துயர்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.