ETV Bharat / state

"அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை" - அமைச்சர் எ.வ.வேலு!

author img

By

Published : Aug 9, 2023, 2:16 PM IST

அண்ணாமலையார் கோயிலுக்குள்ளே தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை செய்ய வேண்டும் என அறங்காவலர் குழு அறிமுக விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறங்காவலர் குழுவிற்கு அறிவுறுத்தினார்.

cell phones not allowed
அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை

அமைச்சர் பேச்சு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்கா திறப்பு விழா மற்றும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர் உறுப்பினர்கள் அறிமுக விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு துணைச் சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள் குழுவினர் உட்படப் பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவில், அண்ணாமலையார் திருக்கோயிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் உறுப்பினர்கள் கோமதி குணசேகரன், மீனாட்சி சுந்தரம், ராஜாராம், பெருமாள் ஆகியோரை அறிமுகப்படுத்தி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உரையாற்றினார்.

அப்போது மேடையில் பேசிய அவர், “இந்த காலகட்டத்தில் திருக்கோயில் என்பது புனிதமானது, அதை நான் மறுக்கவில்லை என்றார். மேலும், ஆன்மீக உணர்வோடு கோயிலுக்குள் போக வேண்டும் எனவும், நாம் கோயிலுக்குள் செல்லும் போது சாமியை மட்டுமே நினைத்துக் கொண்டு தான் செல்லவேண்டும் அப்போது தான் நம் காரியம் நடக்கும் எனவும், அப்படி புகழ்பெற்று விளங்குகின்ற இத்திருத்தலத்தில் செல்போனில் வீடியோ எடுத்து கோயிலைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது தவறானது என்றும், கோயிலுக்கு வெளியே செல்போனை அணைத்தும், உள்ளே ஆன்மீக உணர்வோடும் செல்ல வேண்டும் என்றார்.

மேலும், கலைஞர் மட்டும் இல்லை என்றால் இத் திருக்கோயிலை மீட்டிருக்க முடியாது என்றும், ஒன்றிய அமைச்சர் தொல்லியல் துறை மூலம் இந்த கோயிலை எடுத்துக்கொண்டார் அதை மீட்டெடுத்தது கலைஞர் தான். உண்ணாவிரதப் போராட்டம் போன்ற பல போராட்டங்கள் நடத்தி கோயிலை மீட்க முடியவில்லை, இறுதியாகத் தலைவர் கலைஞர் கூறுகையில், “எனக்கு சாமி மீது நம்பிக்கை இருக்கோ, இல்லையோ ஆனால் மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு என்பதற்கிணங்க நான் நினைக்கிற ஆட்சி மத்தியில் வந்தால் மக்களுக்காக அந்த திருக்கோயிலை மீட்டு மக்களிடம் ஒப்படைப்பேன்” என்றார். அதன்படி திருவண்ணாமலை திருக்கோயிலை மீட்டு மக்களுக்காக ஒப்படைத்தவர் கலைஞர் தான் எனக் கூறினார்.

மேலும், திமுக என்பது ஆன்மீகத்துக்கு எதிரான கட்சி அல்ல என்றும், ஆன்மீகத்தையும் திராவிடத்தையும் இணைத்துத் தான் தற்போதைய திமுக அரசு திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருவதாகவும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உரையாற்றினார்” என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்...! மவுனம் கலைப்பாரா மோடி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.