ETV Bharat / state

திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு- அதிமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

author img

By

Published : Jan 14, 2023, 8:51 PM IST

திருவண்ணாமலையில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில், நகராட்சியில் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அதிமுக கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் வெளிநடப்பு செய்தனர்.

திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு- அதிமுக கவுன்சிலர் குற்றாசாட்டு
திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு- அதிமுக கவுன்சிலர் குற்றாசாட்டு

திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு- அதிமுக கவுன்சிலர் குற்றாசாட்டு

திருவண்ணாமலையில் நகராட்சியில் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலையில் உள்ள 39 வார்டுகளை சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக கவுன்சிலர் பழனி தனது வார்டில் உள்ள ஐந்து பூங்காக்கள் பராமரிப்பு இன்றி பூட்டி வைத்துள்ளதாகவும், அந்த இடங்களில் கஞ்சா போதையில் இளைஞர்கள் சுற்றி திரிவதாகவும், இதைக் கேட்கும் பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களையும் கஞ்சா போதையில் உள்ள இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டல் விடுவதாகவும் நகர மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் திருவண்ணாமலை ஐந்தாவது வார்டில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் இதே போன்று இளைஞர்கள் கஞ்சா அடித்து விட்டு பொதுமக்களை மற்றும் அப்பகுதி கவுன்சிலர்களை மிரட்டி வருவதாகவும் நகர மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்.

இத்தகைய போக்கினை தடுக்கும் விதமாக நகராட்சி ஆணையர் மற்றும் நகர மன்ற தலைவர் காவல் துறைக்கு இதுபோன்ற சமூக விரோதி செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய தீர்மானம் நிறைவேற்றி திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளிடம் மனு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் அதிமுக கவுன்சிலர்கள் உள்ள பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் ஒரு தலை பட்சமாக எத்தகைய வசதிகளும் செய்து தராமல் வருவதாகவும் ஆகவே அந்தந்த பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் சாலை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தினார்.

மேற்கண்ட கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் எத்தகைய அடிப்படை வசதிகளின் நகராட்சி ஆணையர் மற்றும் தலைவர் எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளாததை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க:ஜோஷிமத் போன்ற பேரழிவு மீண்டும் ஏற்பட வாய்ப்பு - மத்திய இணை அமைச்சர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.