ETV Bharat / state

குடிபோதையில் மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு!

author img

By

Published : Jul 12, 2019, 8:25 PM IST

திருவள்ளூர்: ஆவடி அருகே குடிபோதையில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.

குடிபோதையில் மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியைச் சேர்ந்த சத்தியநாதன் (21). இவர் கடந்த 6ஆம் தேதி மாலை குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது நெமிலிச்சேரி- வண்டலூர் புறவழிச்சாலையில் உள்ள சர்வீஸ் ரோட்டில் பாலத்தின் மீது போதையில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 8 அடி உயரத்தில் இருந்து தவறி பின்பக்கமாக கீழே விழுந்தார்.

இதில், பலத்த காயமடைந்த சத்தியநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குடிபோதையில் மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு!

இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பட்டாபிராம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:ஆவடி அருகே குடிபோதையில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் ஒருவர் உயிருக்குப் போராடிய நிலையில் பலி.Body:ஆவடி அடுத்த பட்டாபிராம், அன்னம்பேடு, முத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சத்தியநாதன் (21). இவர், கூலி தொழிலாளி. இந்நிலையில்,  கடந்த 6ந்தேதி மாலையில் சத்தியநாதன் குடிபோதையில் இருந்துள்ளார். இவர் நெமிலிச்சேரி- வண்டலூர் புறவழிச்சாலையில் உள்ள சர்வீஸ் ரோட்டில் பாலத்தின் மீது போதையில் அமர்ந்து இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக 8அடி உயரத்தில் இருந்து தவறி பின்பக்கமாக கீழே விழுந்துள்ளார். இதில், அவர் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். 


   பின்னர், அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108ஆம்புலன்ஸ் மூலமாக ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி  சத்தியநாதன் காலை பரிதாபமாக இருந்தார். புகாரின் அடிப்படையில் பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.