ETV Bharat / state

இரக்கமற்ற செயல்.. 4 ஏக்கர் மாமர செடிகளை வெட்டிய மர்ம நபர்!

author img

By

Published : Feb 15, 2023, 8:04 AM IST

கும்மிடிப்பூண்டி அருகே சுமார் 4 ஏக்கர் மாமர செடிகளை வெட்டிய சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

4 ஏக்கர் மாமர செடிகளை வெட்டிய மர்ம நபர்
4 ஏக்கர் மாமர செடிகளை வெட்டிய மர்ம நபர்

4 ஏக்கர் மாமர செடிகளை வெட்டிய மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துபாக்கம் ஆண்டார் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 63. இவர் அதே பகுதியில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் நெல், தர்பூசணி, வேர்க்கடலை மற்றும் மாஞ்செடி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் மாஞ்செடிகளுடன் கூட்டுப் பயிராக வேர்க்கடலை விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலத்தில் பயிரிடப்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாஞ்செடிகளை இரவோடு இரவாக மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துச் சென்றுள்ளனர். 4 வருடங்களாக வளர்த்து வந்த மாஞ்செடிகள் பலன் தரும் தருவாயில் அரங்கேறிய இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஆறுமுகம் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் ஆறுமுகம் அளித்த புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் விவசாயிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓசூரில் நிகழ்ந்த விபத்தில் அக்கா, தங்கை உட்பட மூவர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.