ETV Bharat / state

கல்லூரி மாணவனை சரமாரியாக வெட்டிய கஞ்சா கும்பல்

author img

By

Published : Nov 26, 2019, 11:24 PM IST

திருவள்ளூர்: அயத்தூரில் கல்லூரி மாணவனை சரமாரியாக வெட்டிய கஞ்சா கும்பலை கைது செய்யக்கோரி உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

கஞ்சா கும்பல் மாணவனின் வீடு முன்பு வந்து கத்தியை காட்டி மிரட்டல்
கஞ்சா கும்பல் மாணவனின் வீடு முன்பு வந்து கத்தியை காட்டி மிரட்டல்

திருவள்ளூர் மாவட்டம் அயத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் தனியார் கல்லூரியில் படித்துவரும் நிலையில், நேற்றிரவு இவரது இரு சக்கர வாகனத்தை மறித்து 3 பேர் கொண்ட கஞ்சா கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய விக்ரமனை கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாணவனை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து கஞ்சா கும்பல் மாணவனின் வீடு முன்பு வந்து கத்தியை காட்டி உறவினர்களை மிரட்டிச் சென்றுள்ளனர். இதனையடுத்து கஞ்சா கும்பலை கைது செய்ய வலியுறுத்தி மாணவனின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

கஞ்சா கும்பல் மாணவனின் வீடு முன்பு வந்து கத்தியை காட்டி மிரட்டல்

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அந்த 3 பேர் கொண்ட கும்பல் அயத்தூர் அடுத்த மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த ஆனந்த், அஜித் குமார், வல்லரசு என்பது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளைஞரின் தலையை வெட்டிய பெண் வீட்டாரின் கொடூரச் செயல்!

Intro:திருவள்ளூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவனை சரமாரியாக வெட்டிய இளைஞர்களை கைது செய்யக்கோரியும் கஞ்சா விற்பனை செய்வதுடன் போதையில் கிராம மக்களை கத்தியை காட்டி அச்சுறுத்தலாகவும் கிராம மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்.


Body:திருவள்ளூர் மாவட்டம் அயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்ரம். கல்லூரி மாணவனான இவன் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது அங்கே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் 3 பேர் மடக்கி இரு சக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கி கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய விக்ரம் தனது நண்பர்களுடன் தனது ஊரில் உள்ள குளக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த போதை ஆசாமிகள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கல்லூரி மாணவனான விக்ரமை வெட்டியுள்ளனர். இதனால் சக நண்பர்களுடன் விக்ரம் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதனையடுத்து அந்த கிராமத்திற்குள் புகுந்த அந்த கஞ்சா போதை இளைஞர்கள் கத்தியை தரையில் தீட்டி விக்ரம் என்று கேட்டு கிராமத்து மக்களை அச்சுறுத்தி உள்ளனர். அச்சுறுத்திய இளைஞர்கள் யார் என்று விசாரித்தபோது அவர்கள் அயத்தூர் அடுத்த மேட்டு காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாகவும் அதில் முக்கிய நபரான ஆனந்த் என்பவரின் கூட்டாளிகளான அஜித் குமார் மற்றும் வல்லரசு என்பது தெரியவந்தது. எனவே கல்லூரி மாணவனை சரமாரியாக வெட்டி கிராமத்து மக்களை கத்தியை காட்டி அச்சுறுத்திய மூன்று இளைஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கிராமத்து பெண்கள் இளைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். கஞ்சா விற்பனை செய்வோர் மீதும் கல்லூரி இளைஞரை சரமாரியாக வெட்டிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

பேட்டி : ஈஸ்வரி - அயத்தூர் கிராமம்.


Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.