ETV Bharat / state

இருளர் இன மக்களுக்கு ’பழங்குடியினர் சான்று’ வழங்கிய அமைச்சர் சா.மு.நாசர்

author img

By

Published : Oct 3, 2021, 7:17 PM IST

திருத்தணி அருகே 45 இருளர் இன மக்களுக்கு பழங்குடியினர் சான்றை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.

அமைச்சர் சா.மு.நாசர்
அமைச்சர் சா.மு.நாசர்

திருவள்ளூர்: திருத்தணி அருகே வீரகநல்லூர் ஊராட்சியில் வசித்து வரும் இருளர் இன மக்கள், தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவும், தங்கள் பகுதி குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாகவும் இனச் சான்று வழங்க வேண்டியும் வருவாய்த் துறை அலுவலர்களை பலமுறை சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 45 குடும்பங்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஷ், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் இருளர் குடியிருப்பு பகுதிக்கு சென்று இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர்.

இதனையடுத்து கே.ஜி.கண்டிகையில் 4ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார். திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சந்திரன், நகரமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.பூபதி உள்பட அரசு அலுவலர்கள் இதில் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க : திருநங்கைகள் வாழ்வில் முன்னேற்றம் அடைய விழிப்புணர்வுக் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.