ETV Bharat / state

சிஏஏ & என்ஆர்சி நடைமுறைக்கு எதிர்ப்பு: கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jan 2, 2020, 8:25 AM IST

திருவள்ளூர்: புத்தாண்டு பிறந்த நேரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி இஸ்லாமியர்கள் மத்திய அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

protest
protest

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை பல இடங்களிலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றுவருகிறன.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ, என்ஆர்சி நடைமுறையை திரும்பப்பெற வலியுறுத்தி, 2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த நேரத்தில், எஸ்டிபிஐ கட்சி சார்பில் இஸ்லாமியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் வீட்டு முன்பு கோலம் போட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு!

Intro:ஆவடியில் புத்தாண்டு பிறக்கையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்Body:ஆவடியில் புத்தாண்டு பிறக்கையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்

இந்தியாவின் பல்வேறு பகுதியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.பல்வேறு தரப்பினரும் பல வகையில் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.அப்படி
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள CAA மற்றும்NRC குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி 2020ம் ஆண்டு புத்தாண்டு பிறந்த சமயத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் SDPI திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் தலைமையில் இஸ்லாமியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் புத்தாண்டு பிறக்கும் போது எங்களுக்கு சட்டத்தை மாற்றி தர வேண்டும் என்று வலியுறுத்தி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.