ETV Bharat / state

சுதந்திர இந்தியாவில் சாலையில் நடக்க தடையா? - நெல்லையில் சமூக ஆர்வலருக்கு விதித்த தடையால் பரபரப்பு!

author img

By

Published : Jul 11, 2023, 7:52 AM IST

Updated : Jul 11, 2023, 9:27 AM IST

நெல்லையில் முதலமைச்சரிடம் கோரிக்கை அளிப்பதற்காக நடைபயணமாக சென்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னைக்கு நடைபயணம் சென்ற சமூக ஆர்வலரை எச்சரித்த காவல் ஆய்வாளர்
அனுமதி இல்லாமல் தனி மனிதன் முதல்வரை சந்திக்க முடியாது

சுதந்திர இந்தியாவில் சாலையில் நடக்க தடையா?

திருநெல்வேலி: இந்திய அரசியல் சட்ட அதிகாரங்களை அனைத்து சமுதாயத்தினருக்கும் விகிதாச்சார அடிப்படையில் பிரித்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மகாராஜ நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இளங்கோ யாதவ் என்பவர், நெல்லையில் இருந்து நடைபயணமாக முதலமைச்சரை சந்திக்க சென்னை செல்லத் திட்டமிட்டு உள்ளார்.

அந்த வகையில், சமூக ஆர்வலர் அவரது திட்டப்படி நேற்று (ஜூலை 10) பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார். சிறிது தூரம் நடந்து சென்றபோது, அங்கு வந்த காவல் ஆய்வாளர் ஹரி நடைபயணமாக சென்னை செல்ல உங்களுக்கு அனுமதி இல்லை என்றும்,, எனவே திரும்பிச் செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார்.

அதற்கு இளங்கோ யாதவ் தரப்பு வழக்கறிஞர்கள் சுதந்திர இந்தியாவில் ரோட்டில் நடந்து செல்லக் கூடாதா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு ஆய்வாளர் ஹரி, தனி மனிதன் கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகள் சென்றால் கூட அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும் எனவும், எனவே நடை பயணம் மேற்கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இல்லை.. மனு அளிக்க வருவோரின் துயரம் தீருமா?

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இறுதியாக காவல் ஆய்வாளர், இளங்கோ யாதவை நடைபயணத்தை தடை செய்து அவரை வீட்டிற்கு திருப்பி அனுப்பினார். அப்போது இளங்கோ யாதவை பின்தொடர்ந்து வந்த அவரது குடும்பத்தினரின் காரை, ஆய்வாளர் ஹரி நிறுத்தி திருப்பி போக கூறி உள்ளார்.

இதனால் அங்கு லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது காவல் ஆய்வாளர் ஹரி, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக கூறி ஒரு வழக்கை போட்டால்தான் சரி வரும் என்று எச்சரித்தபடி வந்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பயணம் செல்ல இருந்த சமூக ஆர்வலரை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், வேண்டுமென்றே போக்குவரத்து நெருக்கடியை உருவாக்கி வழக்கு போடுவதாக ஆய்வாளர் எச்சரித்ததாக இளங்கோ யாதவ் தரப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது குறித்து இளங்கோ யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்திய அரசியல் சாசன அதிகாரங்களை எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட அனைத்து சமுதாய பிரிவினருக்கும் விகிதாச்சார அடிப்படையில் பிரித்து வழங்க வேண்டும். தற்போது இந்த அதிகாரம் ஒரே ஒரு சமுதாயத்தினர் கையில் உள்ளது.

அந்த அதிகாரத்தை அனைவருக்கும் பகிர்ந்தளித்தால்தான் பலமான இந்தியாவை உருவாக்க முடியும். அதிகார பங்களிப்பு இருந்தால்தான் நாடு முன்னேற்றம் அடையும். எனது கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் முதலமைச்சரை சந்திப்பேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தக்காளி விலை உயர்வு.. தக்காளி சாஸில் ரசம் வைத்து நூதன போராட்டம்!

Last Updated : Jul 11, 2023, 9:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.