ETV Bharat / state

பூரண மதுவிலக்கு தமிழ்நாட்டில் சாத்தியமில்லை - கார்த்தி சிதம்பரம்

author img

By

Published : Jun 25, 2023, 7:39 AM IST

காங்கிரஸ் - திமுக கூட்டணியே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் என எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கு கொண்டு வந்தால் மக்களின் உயிரிழப்பு அதிகமாகுமாம் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்
மதுவிலக்கு கொண்டு வந்தால் மக்களின் உயிரிழப்பு அதிகமாகுமாம் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்

மதுவிலக்கு கொண்டு வந்தால் மக்களின் உயிரிழப்பு அதிகமாகுமாம் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி: காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிக்காக திருநெல்வேலிக்கு வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தனக்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்தார்.

பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்க தொடங்கி விட்டதாகவும், காங்கிரஸ் - திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்பதால் வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தேசிய கட்சி என்பது காங்கிரஸ், பாஜக மட்டுமே என குறிப்பிட்ட அவர் கூட்டணியில் உருவாகும் ஆட்சியே உண்மையான ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியும் என்றார். கமல்ஹாசன் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் அவரை வரவேற்பதாகவும், விஜய் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும், சினிமா ரசிகர்கள் கூட்டத்தை மட்டுமே வைத்து அரசியல் கட்சியை நடத்தி விட முடியாது எனக் கூறிய அவர், வாக்கிற்கு பணம் வாங்கக் கூடாது என்ற நடிகர் விஜயின் கருத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

அதேபோல் பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்பது சாத்தியமில்லாதது என்றும், மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து மக்களின் உயிரிழப்பு மேலும் அதிகமாகும் எனவும் குறிப்பிட்டார். அதேபோல் பாஜக தன்னை எதிர்க்கும் அரசியல்வாதிகளை ஒடுக்கும் வகையில் அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், அமலாக்கத்துறை என்ற அமைப்பே இருக்கக் கூடாது என்றார்.

மேலும், “தேசிய அளவிலான கூட்டணி என்பது தேசிய கட்சிகளுக்குத்தான். அதனை அவர்களால் மட்டுமே தலைமையேற்று நடத்த முடியும். மாநில கட்சித் தலைவர்கள் அதனை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் தலைவர் ஸ்டாலின்தான். தமிழ்நாட்டில் யாரை கூட்டணியில் சேர்ப்பது, நீக்குவது என அனைத்து முடிவுகளையும் கூட்டணித் தலைவர்தான் மேற்கொள்வார்.

ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் அந்நியச் செலவாணி மோசடி உள்ளிட்ட வியாபாரங்களில் இருக்கும் வர்த்தகத்தின் மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனங்களை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட அமைப்புதான் அமலாக்கத்துறை. அது இன்று அடங்காப்பிடாரி இயக்கமாக கொள்ளிவாய் பிசாசுவாக மாறி உள்ளது.

அமலாக்கத்துறை மூடப்பட வேண்டும். அமலாக்கத் துறைக்கு என நிரந்தரப் பணியாளர்கள் யாருமே கிடையாது. அமலாக்கத் துறையை கலைத்து விட்டு, சிபிஐயிடம் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு பிரிவை இணைத்து செயல்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "திருடுபோன கலைப் பொருட்களை திருப்பிக் கொடுக்க அமெரிக்கா திட்டம்" - பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.