ETV Bharat / state

வெடிப்பொருளுடன் விரட்டிய கும்பல்.. போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த இளைஞர்கள்..

author img

By

Published : Jan 17, 2023, 9:40 AM IST

வெடிப்பொருள் மற்றும் ஆயுதங்களோடு விரட்டிய கும்பலிடம் இருந்து தப்பிய இரண்டு இளைஞர்கள் நெல்லை டவுன் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.

வெடிப்பொருள் மற்றும் ஆயுதங்களோடு விரட்டிய கும்பல்
வெடிப்பொருள் மற்றும் ஆயுதங்களோடு விரட்டிய கும்பல்

வெடிப்பொருளுடன் விரட்டிய கும்பல்

திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த ஐயப்பன், தனது உறவினர் கலைச்செல்வனுடன் குற்றால ரோடு சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயம் எதிரில் உள்ள பரோட்டா கடைக்கு நேற்றிரவு (ஜன 16) சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவரையும், காரில் பின் தொடர்ந்து விரட்டி வந்த அடையாளம் தெரியாத நபர்கள், காரில் இருந்து மர்ம பொருள் ஒன்றை தூக்கு வீசியுள்ளனர். அது தரையில் பட்டதும் அதிபயங்கர சப்தத்துடன் வெடித்ததுள்ளது.

அதன்பின் காரில் இருந்து இறங்கிய அந்த கும்பல், ஜயப்பன் மற்றும் கலைச்செல்வனை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு விரட்டி உள்ளது. இவர்களிடம் இருந்து தப்பிய இருவரும், டவுன் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையில் அப்பகுதியில் போலீசாா் குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நடமாடும் தடய அறிவியல் ஆய்வகம் வரவழைக்கப்பட்டு, அதிகாரிகள் மர்ம பொருள் வெடித்த இடத்தில் சோதனை செய்தனர். காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த ஐயப்பன் மற்றும் கலைச்செல்வன் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம பொருள் வெடித்த இடத்தில் இருந்து கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் வெடித்த மர்ம பொருளால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும் இருதரப்பினருக்கும் இடையே உள்ள முன்பகை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் தொிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் நன்கொடை தரமறுத்த இளைஞர் அடித்துக் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.