ETV Bharat / state

"சமூக நீதியை அடைய கல்வியை தவிர வேறு பாதை இல்லை" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

author img

By

Published : Apr 2, 2023, 3:52 PM IST

கல்வியில் சிறந்து விளங்கும் தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

proj
சமூக நீதி

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பாரம்பரியமிக்க தூய சேவியர் கல்லூரியின் நூற்றாண்டு விழா நேற்று(ஏப்ரல்.1) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக நிதி மற்றும் மனித வள மேம்பாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, "தென் தமிழகத்தில் கல்வி, சமுக நலன் மற்றும் பெண்கல்வி என அனைத்து சமுக முன்னேற்றத்திலும் கிறிஸ்துவ மிஷனரிகள் பெரும் பங்கு வகித்திருப்பது பாராட்டிற்குரியது. திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் உயிர் மூச்சாக சமூக நீதி உள்ளது. சமுதாயம் சமூக நீதியை அடைய கல்வியை தவிர வேறு பாதையில்லை. தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகமாக இருக்கும் பகுதிகளாக கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்கள் திகழ்ந்து வருகிறது. ஆனால், வேலைவாய்ப்பும் பொருளாதாரத்தில் முன்னேறிய நிலை இல்லாமல் இருக்கிறது.

எனவே, தென்மாவட்டங்களில் வேலைவாய்புகளை உருவாக்கும் வகையில் வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நம் நாட்டில் பிரிவினை வாதம் சூழ்ச்சியால் அரசியல் செய்து வரும் நிலையில், 100 ஆண்டுகளாக கல்வி சேவையாற்றி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த கல்லூரி திகழ்கிறது. ஆண்டுக்கு 60 சதவீதம் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கி இந்த கல்லூரி சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. 50 சதவீதம் பெண்கள் படித்து வருகிறார்கள் என்பதும் பாராட்டுக்கு உரியது" என்று கூறினார்.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முடிகிறது.. மே 5ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.