ETV Bharat / state

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்: 'கிரையோஜெனிக் இயந்திர சோதனை' வெற்றி

author img

By

Published : Oct 29, 2022, 3:15 PM IST

திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான 'கிரையோஜெனிக் இயந்திர சோதனை' வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Etv Bharat
Etv Bharat

திருநெல்வேலி: பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ எரிபொருள் திட்ட வளாக மையம் அமைந்துள்ளது. இங்கு ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் எந்திரங்களின் சோதனை நடைபெறும்.

இந்நிலையில் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 'ககன்யான்' திட்டத்தின்படி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் எந்திரத்தின் பரிசோதனை நடந்தது. கிரையோஜெனிக் எந்திரத்தின் சி.20 இ 11 எம்.கே.111 பரிசோதனை 28 விநாடிகள் நீடித்தது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்: 'கிரையோஜெனிக் இயந்திர சோதனை' வெற்றி

இந்த சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய வாளாக இயக்குனர் பத்ரி நாராயணமூர்த்தி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.