ETV Bharat / state

பறை இசை கருவிகளை அவமதித்த அரசு பேருந்து நடத்துனர்: கல்லூரி மாணவியை நடு வழியில் இறக்கி விட்ட கொடூரம்!

author img

By

Published : May 11, 2023, 10:51 AM IST

அரசு பேருந்தில் பறை இசைக் கருவிகளுடன் எறி அமர்ந்திருந்த கல்லூரி மாணவியை, நடத்துனர் திட்டியதோடு, நடுவழியில் இறக்கி விட்டுச் சென்ற அவலம் திருநெல்வேலியில் நிகழ்ந்துள்ளது.

A college student boarded a bus from Tirunelveli to Madurai with Parai instrument was midway dropped by the conductor
பறை இசை கருவிகளை அவமதித்த அரசு பேருந்து நடத்துனர்: கல்லூரி மாணவியை நடு வழியில் இறக்கி விட்ட கொடூரம்

பறை இசை கருவிகளை அவமதித்த அரசு பேருந்து நடத்துனர்: கல்லூரி மாணவியை நடு வழியில் இறக்கி விட்ட கொடூரம்

திருநெல்வேலி: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதா. இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக தனது ஊரான சிவகங்கையில் இருந்து பறை இசை கருவிகளை கல்லூரிக்கு கொண்டு வந்துள்ளார்.

பின்னர் கல்லூரியில் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து மாலையில் சொந்த ஊருக்கு பறை இசை கருவிகளை கொண்டு செல்வதற்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார்.

பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது டிக்கெட் கேட்க வந்த நடத்துனர், பறை இசைக் கருவிகளுடன் பேருந்தில் இருந்த மாணவியை தவறாக பேசியுள்ளார். மேலும் பறை இசை கருவிக்கு பேருந்தில் இடமில்லை எனக்கூறி, பேருந்தில் ஓட்டுனர் அனுமதித்தாலும், பாதி வழியில் மாணவியை இறங்கச் சொல்லி உள்ளார். உடன் வந்த மற்ற பயணிகளின் வற்புறுத்தல் காரணமாக பறை இசைக் கருவிகளுடன் சேர்த்து மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார் நடத்துனர்.

இதையும் படிங்க: 'கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நியாயமான சந்தை விலை நிர்ணயிக்கவில்லை' - சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

பாதி வழியில் இறக்கி விடப்பட்ட்டதால் செய்வதறியாது தனியாக அழுதுக் கொண்டிருந்த மாணவியின் நிலை பரிதாபகரமாக இருந்தது. மேலும் பேருந்தில் அனைவர் முன்னிலையிலும் நடத்துனர் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மாணவி மனம் உடைந்து போயிருந்தார். இதை அறிந்த செய்தியாளர்கள் உடனடியாக மாணவி நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக போக்குவரத்து கழக அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். ஆனால் மாணவியை ஏற்றிச் செல்ல பேருந்துகள் எதுவும் வரவில்லை.

அரை மணி நேரத்திற்கும் மேலாக வந்த பேருந்துகளை ஒவ்வொன்றாக நிறுத்தி மாணவியை பேருந்தில் ஏற்றி விட முயற்சித்த போதும் எந்த பேருந்துகளிலும் பறை இசை கருவிகளை எடுத்துக் கொண்டு பயணம் செய்வதற்கு அனுமதிக்கவில்லை. இறுதியாக நெல்லையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற அரசு பேருந்து நடத்துனர் பாஸ்கர், செய்தியாளர்களின் மூலம் மாணவியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு மதுரையில் மாணவி குறிப்பிட இடத்தில் இறக்கி விடுவதாக கூறி, மாணவி கொண்டு வந்த பறை இசை கருவிகளுடன் மாணவியை பேருந்தில் ஏற்றிச் சென்றார்.

இதையும் படிங்க: "ரூ.1 லட்சம் கோடி மதுபான ஊழல்" - மு.க.ஸ்டாலின் அரசு மீது கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.