ETV Bharat / state

தடையை மீறி அருவிக்கு செல்லும் இளைஞர்கள்!

author img

By

Published : Sep 17, 2020, 7:26 PM IST

தேனி: தேவதானப்பட்டு அருகே வனத்துறையால் தடை செய்யப்பட்ட தலையாறு அருவிக்கு இளைஞர்கள் செல்லும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

young-people-going-to-the-waterfall-despite-the-ban
young-people-going-to-the-waterfall-despite-the-ban

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள தலையாறு அருவி என்றழைக்கப்படும், எலிவால் நீர்வீழ்ச்சி தான் இதன் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாகும்.

தமிழ்நாட்டின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியான இதன் அழகை கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தேனி மாவட்ட எல்லையான டம்டம் பாறை பகுதியிலிருந்து ரசித்தவாறு செல்வதுண்டு. ஆனால் அருவி அமைந்திருக்கும் இடம் ஆபத்து நிறைந்த அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், சிறுத்தை, காட்டெருமை பேன்ற வனவிலங்குகளின் அச்சுறுத்தலினாலும் வனத்துறையினர் அப்பகுதிக்கு செல்ல தடை விதித்துள்ளனர்.

ஆனால் வனத்துறையின் அறிவிப்பை மீறி இளைஞர்கள் சிலர் ஆபத்தை உணராமல் அருவிக்கு சென்று வருகின்றனர். மேலும் அருவியில் குளித்து விளையாடுவதை காணொலியாக பதிவு செய்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.

தடையை மீறி அருவிக்கு செல்லும் இளைஞர்கள்

இதையடுத்து காணொலியில் இருக்கும் இளைஞர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடையை மீறி அருவிக்கு செல்லும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கோவில்பட்டியில் மர்மமான முறையில் 28 மயில்கள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.