ETV Bharat / state

தேனியில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!

author img

By

Published : May 3, 2019, 11:11 PM IST

தேனி: தென்மேற்கு பருவக்காற்று தேனிப் பக்கம் வீசுவதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

தேனியில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வீசும் காற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கண்டமனூர், கடமலைக்குண்டு, அம்பாசமுத்திரம், கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், உத்தமபாளையம், போடி, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட காற்றாலைகளில், தற்போது மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியதால், காற்றின் வேகம் வினாடிக்கு 9 மீட்டரில் இருந்து 10 மீட்டர் அளவில் அதிகரித்துள்ளது. இதனால் நாளொன்றுக்கு ஒரு காற்றாலையில் சுமார் 12 ஆயிரத்தில் இருந்து 13 ஆயிரம் யூனிட் வரை மின் உற்பத்தியாகிறது.

தேனியில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

கடந்த சில வாரங்களாக படிப்படியாக அதிகரித்து வந்த காற்றாலை மின் உற்பத்தி, தற்போது 250 மெகாவாட்டை தாண்டியுள்ளது.

Intro: தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம் வீசுவதால் சுறுசுறுப்படைந்த காற்றாலை மின்உற்பத்தி.



Body: தேனி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வீசும் காற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காற்றாலை மின் உற்பத்தி சுறுசுறுப்படைந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கண்டமனூர், கடமலைக்குண்டு அம்பாசமுத்திரம், கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், உத்தமபாளையம், போடி, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட காற்றாலைகளில் தற்போது மின்சாரம் உற்பத்தி அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியதால், காற்றின் வேகம் வினாடிக்கு 9மீட்டரில் இருந்து 10மீட்டர் அளவில் அதிகரித்துள்ளது. இதனால் நாளொன்றுக்கு ஒரு காற்றாலையில் சுமார் 12ஆயிரத்தில் 13000 யூனிட் வரை மின் உற்பத்தி நடைபெறுகிறது.. கடந்த சில வாரங்களாக படிப்படியாக அதிகரித்து வந்த காற்றாலை மின் உற்பத்தி, தற்போது 250 மெகாவாட்-ஐ தாண்டியுள்ளது.
லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையம், சுருளியாறு மின் உற்பத்தி நிலையம், முல்லையாற்றில் அமைக்கப்பட்டுள்ள மைக்ரோ மின் உற்பத்தி நிலையங்களில் தற்போது கோடை மற்றும் பராமரிப்பு காரணங்களுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்மேற்குப் பருவக் காற்றின் வேகத்தினால், காற்றாலை மின்சார உற்பத்தி கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் மின் துறையினர் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கோடையில் உண்டாகும் மின் பற்றாக்குறை ஏற்படாது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Conclusion: வழக்கமாக மே இரண்டாவது வாரத்தில் தொடங்குகின்ற தென்மேற்கு பருவக்காற்று, இந்தாண்டு முன்கூட்டியே துவங்கியுள்ளது. மேலும் சீசன் காலத்தில் காற்றின் வேகம் விநாடிக்கு 20மீ வரை வீசத்தொடங்கும், இதன் காரணமாக மின் உற்பத்தியும் கணிசமாக உயர்ந்து 20ஆயிரம் யூனிட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, காற்றாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.