ETV Bharat / state

தக்காளி விலையை கட்டுப்படுத்திய தேனி நிர்வாகம்! கிலோ 82 ரூபாய்க்கு விற்பனை

author img

By

Published : Jul 11, 2023, 11:19 AM IST

தேனியில் வெளிச்சந்தைகளை விட உழவர் சந்தைகளில் தக்காளியின் விலை குறைவால், மக்கள் தக்காளி வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்

தக்காளி விலையை கட்டுப்படுத்திய தேனி நிர்வாகம்
கிலோ 82க்கு விற்பனையாகும் தக்காளி

தேனி: தமிழ்நாட்டில் தக்காளி வரத்து குறைந்து உள்ள நிலையில், அதன்தேவை அதிகரித்து உள்ளதால் தக்காளி விலை பல மடங்கு உயர்ந்து விற்பனையாகி வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து இருப்பதாலும், உள்ளூர் பகுதிகளிலும் தக்காளியின் வரத்து குறைவாக இருப்பதால் தக்காளியின் விலை தொடர்ந்த்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தமிழ்நாடு அரசின் நடவடிக்கையின் காரணமாக தேனியில் வெளிச் சந்தையில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. தற்பொழுது ஒரு கிலோ 140 ரூபாய் வரை விற்பனையாகும் தக்காளியின் விலையை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதையும் படிங்க: தக்காளி விலை உயர்வு.. தக்காளி சாஸில் ரசம் வைத்து நூதன போராட்டம்!

அதன் ஒரு பகுதியாக, தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளை வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் உழவர் சந்தைகளான தேனி, கம்பம், சின்னமனூர், பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய உழவர் சந்தைகளில் நேரடியாக விற்பனை செய்ய திட்டம் தீட்டப்பட்டு உள்ளது

அதைப்போல, தோட்டக்கலை துறையின் கீழ் செயல்படும் டான்ஹோடா விற்பனை மையத்திலும், நடமாடும் காய்கறி வண்டிகளிலும் நேரடியாக விற்பனை செய்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வெளிச்சந்தை விலையை விட மிக குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் வெளிச்சந்தைகளில் தக்காளி கிலோ 140 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. வெளிச்சந்தைகளை காட்டிலும் தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் தக்காளியின் விலை குறைந்தே விற்பனையாகி வருகிறது.

கம்பம் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 84 ரூபாய்க்கும், தேனி உழவர் சந்தையில் 82 ரூபாய்க்கும் மற்றும் சின்னமனூர் உழவர் சந்தையில் 83 முதல் 84 ரூபாய் வரை தக்காளி விற்பனை ஆகி வருகிறது. வெளிச்சந்தைகளை காட்டிலும் உழவர் சந்தையில் தக்காளி விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் , உழவர் சந்தைகளில் தக்காளி வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும், உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி எப்போதும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: ஒழுக்கத்தை கடைபிடிக்க ஆளில்லா சிற்றுண்டி கடை.. அசத்தும் அன்னப்பன்பேட்டை அரசுப் பள்ளி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.