ETV Bharat / state

ராணுவ வாகன விபத்தில் தமிழ்நாடு வீரர் பலி - சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்

author img

By

Published : Jul 10, 2020, 3:36 PM IST

தேனி: ஒடிசா லடாக் எல்லைப் பகுதியில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

உயிரிழந்த ராணுவ வீரர்
உயிரிழந்த ராணுவ வீரர்

தேனி மாவட்டம் குடச்சனூர் அருகே உள்ள துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் அழகுராஜா(43). இவர் 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவி, மகள்(14), மகன்(9) உள்ளனர்.

இந்திய – சீன எல்லைப் பிரச்னையால் லடாக் பகுதிக்குத் தேவையான தளவாடப் பொருள்களை ஒடிசா முகாமிலிருந்து ராணுவ வாகனத்தில் நேற்று முன்தினம்(ஜூலை 8) அழகுராஜா எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை(ஜூலை 9) ஜார்க்கண்ட் மாநிலம் ராம்நகர் மாவட்டம் சோட்டுப்பாலு என்ற இடத்தில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் அழகுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த அழகுராஜாவின் உடல் இன்று (ஜூலை 10) இரவு கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊரான தேனி மாவட்டம் துரைசாமிபுரத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. ராணுவ வீரர் விபத்தில் பலியான சம்பவம் தேனி மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அடிப்படை வசதிகளின்றி தனிமைப்படுத்தப்பட்ட முகாம்- ராணுவ வீரர்கள் கவலை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.