ETV Bharat / state

அருவியில் குளித்த இளைஞர்கள் மரணம்: உதகையில் உடலை மீட்க போராட்டம்

author img

By

Published : Jan 26, 2020, 9:28 PM IST

நீலகிரி: உதகை அருகே கல்லட்டி அருவியில் குளித்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

youngsters died in kallatti water falls
youngsters died in kallatti water falls

உதகை அருகே உள்ள கல்லட்டி அருவி கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. ஆனாலும் இந்த அருவியை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்த நிலையில் உதகையைச் சேர்ந்த சாமுவேல், கணேசன், சுந்தரமூர்த்தி, பரத் உள்ளிட்ட 7 இளைஞர்கள் கல்லட்டி அருவியைக் காண சென்றுள்ளனர்.

அதில் கணேசன், சாமுவேல் ஆகிய இருவரும் நீரில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அதனைக் கண்ட மற்ற நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் தண்ணீரில் மூழ்கிய இருவரையும் மீட்க முடியவில்லை.

இருவரும் நீரில் மூழ்கி இறந்ததை அறிந்த சக நண்பர்கள் உடனடியாக புதுமந்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் அவர்களின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரின் உடல்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து உடல்களை மீட்கும் பணி நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அருவியில் குளித்த இளைஞர்கள் மரணம் - உடலை மீட்க போராட்டம்
Intro:OotyBody:உதகை 26- 01-20

உதகை அருகே கல்லட்டி நீர் வீழ்ச்சி யில் குளித்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தண்ணீருக்குள் உள்ள இருவரின் உடல்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

உதகை அருகே உள்ள கல்லட்டி நீர் வீழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இன்றி காணபடுகிறது. இருப்பினும் இந்த நீர் வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க வந்து செல்கின்றனர். இந்த நிலையில் உதகையை சார்ந்த சாமுவேல், கணேசன், சுந்தரமூர்த்தி, பரத் உள்ளிட்ட 7 இளைஞர்கள் கல்லட்டி நீர் வீழ்ச்சியை காண சென்றுள்ளனர். அதில் கணேசன் மற்றும் சாமுவேல் ஆகிய இருவர் நீழ்வீச்சியினுள் இறங்கி குளித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அதனை கண்ட மற்ற நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளர். ஆனால் தண்ணீரில் மூழ்கிய இருவரும் வெளியில் வரவில்லை. இருவரும் நீரில் மூழ்கி இறந்ததை அறிந்த சக நண்பர்கள் உடனடியாக புதுமந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் அவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரின் உடல்களும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து உடல்களை மீட்கும் பணி நாளை காலை வரை ஒத்தி வைக்கபட்டுள்ளது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பேட்டி: டோனி - கல்லட்டிConclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.