ETV Bharat / state

"அரசியல் தலைவர்களுக்கும் ஒரு நீட் தேர்வு அமல் படுத்த வேண்டும்" - சீமான்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 10:52 PM IST

seeman speech in ooty: நாட்டை ஆளும் தலைவர்களுக்கு எந்த தகுதி தேர்வும் தேவையில்லை என்ற போது, மாணவர்களுக்கு நீட் தேர்வும் தேவையில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

உதகையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்

நீலகிரி: உதகையில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "நாட்டில் ஏழை மக்கள் வயிற்று பசியில் இருக்கும் போது நிலவில் விண்வெளி ஆராய்ச்சி தேவையா?" என கேள்வி எழுப்பினார்.

மேலும், “நாட்டை ஆளும் தலைவர்களுக்கு எந்த கல்வி தகுதியும் தேயில்லை என்னும் பாேது, மருத்துவ படிப்பிற்கு மாணவர்களுக்கு நீட் தேர்வும் தேவையில்லை என்றும், அப்படியே கட்டாயப்படுத்தப்பட்டால், நாட்டை ஆளும் தலைவர்களுக்கும் தேர்வு முறையை கட்டாயப்படுத்தினால் நாட்டில் அறிவுத்திறன் மேம்படும்” என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய சீமான், "தேர்தலுக்கான நாடகம் தான் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு, எண்ணெய் நிறுவனங்களை தனியார் மையத்துக்கு வழங்குவதால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விளையும் உயர்ந்து வருகிறது. மேலும் என்ணெய் நிறுவனங்களை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்” என்றார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசிய சீமான், "அது தேவையற்ற செலவினங்களை உருவாக்கும், மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே ஆட்சியை கலைத்து, பாஜக ஆட்சி அமைத்தது. அதேபோல் மற்ற மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மத்தியில் பாஜக தேர்தல் நடத்துமா. இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது செலவினங்களை ஏற்படுத்துமே தவிர எந்த பலனும் இல்லை.

காடுகளை பாதுகாக்க வனப்பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதன் மூலம் வனப்பகுதிகளில் உள்ள கனிம வளங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அரசு வழிவகை செய்கிறதாகவும், காட்டை விட்டு வெளியே செல்லலாத மனம் இல்லாத பழங்குடியினரை தீவிரவாதிகள் போல் சித்தரிப்பதை தவிர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நடிகை விஜயலட்சுமி தொடர்ந்துள்ள வழக்கு குறித்து சீமான் கூறுகையில், தான் உயர்ந்த லட்சியத்துடன் அரசியல் செய்வதாகவும், சிலர் தன்னை இரண்டு லட்சுமிகளுடன் இணைத்து அவதூறுகளை அள்ளி வீசுவதாகவும், தேர்தல் நேரத்தில் இது போன்று அவதூறு பரப்பவே சிலர் திட்டம் தீட்டி, இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக பேசினார்.

நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னை ஏமாற்றியதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நடிகரும் பாஜக அரசியல் பிரமுகருமான நபர் தன்னை ஏமாற்றியதாக கர்நாடகா சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார், இந்த வீடியோவை வெளியிட்ட சீமான் இதையே தனது வழக்கமாக விஜயலட்சுமி கொண்டுள்ளதாக சீமான் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: One Nation One Election: ‘ஒரே நாடு, ஒரே தேர்தலை வரவேற்கிறோம்’ - ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.