ETV Bharat / state

குன்னூரில் பிரம்மாண்ட பழக் கண்காட்சி; சுற்றுலா பயணிகள் உற்சாகம்

author img

By

Published : May 28, 2022, 2:15 PM IST

குன்னூர் சீம்ஸ் பூங்காவில் பிரசத்தி பெற்ற 62வது பழக் கண்காட்சி இன்று தொடங்கியது. 2 டன் பழங்களை கொண்டு உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட ராட்சத கழகு, பாண்டா கரடி, தேனீ உருவங்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

பிரம்மாண்ட பழக் கண்காட்சி
பிரம்மாண்ட பழக் கண்காட்சி

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் களைகட்டி வரும் நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். குன்னுாரில் உள்ள சீம்ஸ் பூங்காவில் 62வது பழக் கண்காட்சி இன்று துவங்கியது.

இந்த கண்காட்சியில் 2 டன் பழங்களில் உருவாக்கப்பட்ட ராட்சத கழகு, பாண்டா கரடி, தேனீ ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பூங்கா முழுவதும் 3 லட்சத்து 6 ஆயிரம் மலர் செடிகள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.

பிரம்மாண்ட பழக் கண்காட்சி

மேலும் பால்சம், லில்லியம், மேரிகோல்டு, டேலியா,பெட்டுனியா உள்ளிட்ட மலர்களும் பூத்து குலுங்குகிறது. இது தவிர 20க்கும் மேற்பட்ட அரங்குகளில் பழங்களில் மயில், சிங்கம், புலி, மீன், தாஜ்மகால், போன்ற அலங்காரங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த பழக் கண்காட்சி இன்று துவங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: காட்டு யானை தாக்கியதில் டீக்கடை உரிமையாளார் உயிரிழப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.