ETV Bharat / state

பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி

author img

By

Published : Apr 13, 2020, 10:05 AM IST

தஞ்சாவூர்: பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழாவையொட்டி இன்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி
பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது இப்பேராலயம் உலகப் புகழ்பெற்ற கிறிஸ்துவ பேராலயங்களில் இந்தியாவில் உள்ள பத்து பசிலிக்காவில் ஒன்றாக விளங்குகின்றது.

தற்போது கரோனா பாதிப்பின் காரணமாக 144 தடை உத்தரவின் பேரில் பேராலயம் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலும் ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில் சிறப்பு திருப்பலியை பேராலயத்தில் அதிபர் பாக்கிய சாமி தலைமையில் துணை அதிபர் அல்போன்ஸ் மற்றும் அருட்தந்தையர்கள் நேற்று மேற்கொண்டனர் .

பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழாவையொட்டி இன்று காலை சிறப்பு திருப்பலி

அதைத்தொடர்ந்து பேராலய அதிபர் பாக்கியசாலி கூறுகையில், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோயிலிருந்து அனைவரும் விடுபட வேண்டியும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் அனைத்து நலனையும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

வேளாங்கண்ணியில் பக்தர்களின்றி ஈஸ்டர் திருப்பலி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.