ETV Bharat / state

தஞ்சாவூர் பெரியகோயில் சுவாமி திருஉலா கோலாகலம்!

author img

By

Published : Oct 26, 2020, 10:49 PM IST

தஞ்சாவூர்: பெரியகோயில் பெரியநாயகி அம்மன் ஸ்ரீபெருவுடையார் சுவாமி திருஉலா நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோயில்
தஞ்சாவூர் பெரிய கோயில்

தஞ்சாவூர் பெரியகோயில் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்புகழ்பெற்று விளங்குகிறது. இத்திருக்கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1035ஆவது பிறந்தநாளை சதயவிழாவாக அரசு கொண்டாடியது.
இவ்விழாவின் நிறைவாக அருள்மிகு பெருவுடையார் பெரியநாயகி திருவுறுவச் செப்புத் திருமேனிகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மஹாதீபாரதனை காட்டப்பட்டு பெரிய கோவில் வளாகத்தில் உலா வந்தது.
மேலும் மாமன்னன் ராஜராஜ சோழனின் திருவுறுவச் சிலைக்கு ஆயிரமாவது முடிசூட்டு விழாவின்போது காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரிய சுவாமி அளித்த தங்க கிரீடம் அணிவித்து ராசராசசோழன் திருவீதி உலா நடைபெற்றது.
அதுமட்டுமின்றி மாமன்னன் ராஜராஜசோழன் அவையில் கோயில் தலைமை நிர்வாகியாக இருந்த பொய்கை நாட்டு கிழவன், பட்டத்தரசி லோகமாதேவி திருமேனிகள் உலாவும் நடைபெற்றது.
இந்தத் திருவீதி உலாவில் மேளதாளங்கள் முழங்க சிவகணங்களாக காட்சிதரும் இன்னிசைகள் முழங்க சுவாமி திருஉலா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.