ETV Bharat / state

சோழபுரம் கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை - இஸ்லாமி அமைப்பினர் சாலை மறியல்... தள்ளுமுள்ளு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 5:37 PM IST

Cholapuram Murder case: சோழபுரம் கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரியும் இஸ்லாமி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சோழபுரம் கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி இஸ்லாமியர் ஆர்ப்பாட்டம்
சோழபுரம் கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி இஸ்லாமியர் ஆர்ப்பாட்டம்

சோழபுரம் கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி இஸ்லாமியர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் : கும்பகோணம் அடுத்த சோழபுரத்தில் போலி நாட்டு மருத்துவர் கேசவ மூர்த்தி, அசோக் மற்றும் முகமது அனஸ் ஆகிய இருவரை படுகொலை செய்து, உடலை வெட்டி, தனது வீட்டில் புதைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முஸ்லிம் ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், இவ்வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும், போலி நாட்டு மருத்துவர் கேசவ மூர்த்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் கோரி சோழபுரம் பேருந்து நிலைய பகுதியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டதால் சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, வலுக்கட்டயமாக வேனில் ஏற்றப்பட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து வேனில் ஏற்றியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த நிலையில், போலீசாரின் செயலை கண்டித்து போராட்டக் குழுவின் ஒரு பகுதியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கும்பகோணம் விஸ்வநாதர் கோயில் தனிநபர் பட்டா ரத்து செய்ய உத்தரவு - வழக்கறிஞர் ஆர்.பிரகாஷ் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.