ETV Bharat / state

Pazha Nedumaran: "பிரபாகரன் உயிருடன் உள்ளார்; விரைவில் காட்சி தருவார்" - பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

author img

By

Published : Feb 13, 2023, 11:55 AM IST

Updated : Feb 13, 2023, 4:53 PM IST

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்(ltte leader prabhakaran) நலமுடன் இருக்கிறார் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன்  உள்ளார்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்

பழ.நெடுமாறன் பேட்டி

தஞ்சாவூர்: உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், அவரது குடும்பத்தினரின் ஒப்புதலோடு இந்த தகவலை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவரது பெயரில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது, அதில் "சர்வதேசச் சூழலும், இலங்கையில் இராசபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியாகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம். விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை, இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை.

பழ. நெடுமாறன்
பழ. நெடுமாறன் அறிக்கை

இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதனைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!

Last Updated :Feb 13, 2023, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.