ETV Bharat / state

அரசு கல்லூரி தேர்வு கட்டணம் உயர்வு.. கும்பகோணத்தில் மாணவர்கள் போராட்டம்!

author img

By

Published : Mar 8, 2023, 12:52 PM IST

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
தேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

தேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அரசுக் கலை மற்றும் கல்லூரி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அண்மையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இளநிலைக்குத் தாள் ஒன்றுக்கு ரூ. 75ஆக இருந்த தேர்வு கட்டணத்தை ரூ. 130 ஆகவும், உயர்கல்விக்கு தாள் ஒன்றுக்கு ரூ.100 இருந்த கட்டணத்தை ரூ.150 ஆகவும் உயர்த்தியுள்ளது. மேலும் மறு மதிப்பீட்டு கட்டணத்தை ரூ. 750-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தியுள்ளது.

இந்த கட்டண உயர்வை கண்டித்து, குமபகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், கல்லூரி வாயிலில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும் நிர்வாகத்தின் பேச்சை கேட்க மறுத்து, மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இது அரசு கல்லூரியா.? அல்லது தனியார் கல்லூரியா.? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் தொடக்கத்தில் குறைவான மாணவர்களே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் நேரம் கூட மாணவர்களும் அதிகரித்தனர். இதனால் கல்லூரி நிர்வாகம் செய்வதறியாது தவித்து வருகிறது. கல்லூரி வாயிலில் அமைந்துள்ள கல்லணை - பூம்புகார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குடிநீர் இணைப்பு கேட்ட பெண்ணை 5 மாதமாக அலைக்கழித்த பெண் அதிகாரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.