ETV Bharat / state

தஞ்சாவூர் அருகே தமிழ்மறை நூல்களுக்கு பூஜை செய்து வழிபாடு

author img

By

Published : Jan 15, 2023, 10:45 PM IST

Etv Bharat
Etv Bharat

தஞ்சாவூர் மாவட்டம் கொல்லாங்கரை கிராமத்தில் தமிழ்மறை நூல்களுக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

தஞ்சாவூர் அருகே தமிழ்மறை நூல்களுக்கு பூஜை செய்து வழிபாடு

தஞ்சாவூர்: தைப்பொங்கலையொட்டி (Pongal Festival) தமிழ்நாடு முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடந்தது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கொல்லங்கரை கிராமத்தில் தமிழ் நூல்களைப் பாடி பொங்கல் தினத்தை கொண்டாடினர்.

'தேவாரம்', '12 சைவத் திருமுறைகள் நூல்'களை பாதுகாக்கும் வகையில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கிராமத்திலுள்ள பெரியவர்கள், இளைஞர்கள் ஆகியோர் மார்கழி மாதம் முழுவதும் தேவாரம் பாடல்கள் பாடி கிராமத்தைச் சுற்றி வலம் வந்த தமிழ்மறை நூல்களைப் பாடினர்.

அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 'தை' முதல் நாள் அன்று தேவாரம், திருமுறை நூல்களை கைகளில் வைத்துக்கொண்டு தேவாரம் பாடல்கள் பாடி கிராம வீதிகளில் வந்தவர்களுக்கு ஒவ்வொரு வீட்டிலும் கரும்பு துண்டு வழங்கி, தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபாடு செய்து மரியாதை செய்தனர்.

இதையும் படிங்க: ஈரோட்டில் கால்நடை அலங்காரப் பொருட்களின் விற்பனை அமோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.