ETV Bharat / state

நிலைகுலைந்த நியாயவிலைக்கடை..! உயிர் பயத்தில் ஊழியர்கள்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 7:38 PM IST

Ration shop collapsing condition in Kumbakonam: இடிந்து விழும் நிலையில் உள்ள கும்பகோணம் ஊராட்சிக்கு உட்பட்ட நியாயவிலைக்கடையை சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ration shop collapsing condition in kumbakonam
நிலைகுலைந்த நியாயவிலைக்கடை - உயிர் பயத்தில் ஊழியர்கள்

தஞ்சாவூர்: கும்பகோணம் திருவிடைமருதூர் சாலை அருகே அமைந்துள்ள கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளூர் ஊராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது. இந்த கடையின் மூலம் மாதம் தோறும் பொது மக்கள் ஏராளமானோர் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களான அரசி, ஜீனி, பருப்பு, எண்ணெய், கோதுமை போன்றவற்றை வாங்கி பயன்பெறுகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த நியாய விலை கட்டிடம் முழுவதும் மிகவும் பழுதடைந்து பல இடங்களில் கான்கிரீட் சுவர்கள் அவ்வப்போது பெயர்ந்து விழுந்து எப்போது வேண்டுமானாலும் முழு கட்டிடமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் எப்போது ஆபத்தை விளைவிக்குமோ என்ற உயிர் பயத்தோடு பணியாற்றி வருகின்றனர்.

அதேநேரத்தில் நியாயவிலைக்கடைக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொது மக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் தற்போது மழைக் காலம் என்பதால் கட்டிடத்தின் பல இடங்களில் நீர் கசிவும் ஏற்பட்டு கட்டிடம் மேலும் வலுவிழந்து உள்ளது. இதன் காரணமாக நியாய விலை கட்டிடம் இடிந்து விழுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் இந்த கட்டிடத்திற்கு உண்மை நிலையை விரைந்து நேரில் பார்வையிட்டு உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், தற்காலிகமாக இந்த கடையினை மாற்று இடத்திற்கு இடம் பெயர்வு செய்து பெரிய அளவில் சிதிலமடைந்து காணப்படும் இந்த கட்டிடத்தினை முழுமையாக விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் சீரமைக்கத் தகுதியாக இல்லாத பட்சத்தில் இதனை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தரத் தஞ்சை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையினை விரைந்து எடுக்க வேண்டும் என்பதே உள்ளூர் ஊராட்சி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

இதையும் படிங்க: 18 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் ரஜினி, கமல் படங்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.